பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் தினம்தோறும் நிர்ணயிக்கப்படுகின்றன. மக்களின் அன்றாட தேவைகளில் ஒன்றான எரிபொருட்களின் விலை சில ஆண்டுகளுக்கு முன் மதத்திற்கு இரு முறை நிர்ணயம் செய்வது வழக்கமாக இருந்தது.
ஆனால் தற்போது பாரத் பெட்ரோலியம் , இந்தியன் ஆயில், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை நிர்ணையிக்கின்றன. எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலைகளை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் இறுதியில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது.
எண்ணெய் நிறுவனங்கள் இன்று வெளிப்படுத்திய அறிவிப்பின்படி, சென்னையில் ஒரு லிட்டர் பெட்டோர்ல் 98.65 ரூபாயில் விற்பனை செய்யப்படும். டீசல் ஒரு லிட்டர் 92.83 ரூபாய்க்கு என்ற விலையில் விற்பனை செய்யப்படும்.
இந்த விலை காலை ஆறு மணி முதல் அமலுக்கு வந்தது. சென்னையைத் தவிர தமிழகத்தின் பிற மாவட்டங்களில் எரிபொருள் விலையில் 50 காசுகல் வரை மாற்றங்கள் இருக்கக்கூடும்.
இதையடுத்து,தமிழகத்தில் நிதி நிலைமை எப்போது சீராகுமோ அப்போது பெட்ரோல்,டீசல் விலை குரைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
சட்டமன்றக் கூட்டத்தொடரில் ஆளுநர் பன்வாரி புரோஹித் அவர்களின் உரையின் மீதான விவாதம் இன்று தொடங்கியது.இதில் உள்ளாட்சி அமைப்புகளை நிர்வகிக்கும் தனி அலுவலர்களின் பதவிகத்தை நீட்டிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது.
இதனை தொடர்ந்து அதிமுக ம்.எல்.எ அக்ரி கிருஷ்ணமூர்த்தி மின்சார வாரியம்,போக்குவரத்து துறை கடகடனில் இருப்பதென்றால் அதை போக்க செயல் திட்டம் வகுக்கலாம் என்று பெட்ரோல் டீசல் வரி அளவுக்கு மீறி உயர்த்தப்பட்டுள்ளதாக கூறினார்.
அதிமுக எம்.எல்.எ கேள்விகளுக்கு பதில் அளிக்கும் விதமாக சட்டப்பேரவையில் தமிழகத்தில் எப்போது நிதி நிலைமை சீராகிறதோ அப்போது தான் பெட்ரோல் டீசல் விலை குறைக்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
2006-2011 ஆம் ஆண்டில் திமுக ஆட்சிக்காலத்தில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்ததால் பெட்ரோல் டீசல் விலையும் உயர்த்தப்பட்டது,அப்போது கலைஞர் வகைகள் பெட்ரோல் டீசல் வரியை குறைத்தார்.இம்முறை இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது வரி உயர்த்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:
சதம் அடித்த பெட்ரோல் விலை-கொடைக்கானலில் ரூ.102க்கு விற்பனை!