1. செய்திகள்

ஓராண்டில் இருமடங்காக உயர்ந்த சமையல் எண்ணெய் விலை

T. Vigneshwaran
T. Vigneshwaran

இந்தியாவுக்கான தேவையில் சுமார் 80% சூரியகாந்தி எண்ணெய் மற்றும் பாம் ஆயில் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுவதால் கடந்த ஓராண்டில் மட்டும் 70-100% அளவுக்கு விலை அதிகரித்துள்ளதாக சமையல் எண்ணெய் மொத்த விற்பனையாளராகள் தகவல்.

இந்தியாவில் சமையல் எண்ணெயின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது,கடந்த ஆண்டு மார்ச் மாதத்தை ஒப்பிடும் பொத்து,தற்போது 100 சதவீதம் வரை விலை அதிகரித்துள்ளது.கடந்த ஆண்டு இதே நேரம் லிட்டர் 55 ரூபாயாக இருந்த சமையல் எண்ணெய் விலை இப்போது 155ரூபாயை எட்டியுள்ளது.

முந்திய விற்பனையாளர்கள் பிரான்ஸ்,நோர்வே, ஆஸ்திரேலியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து சமையல் எண்ணெயை இறக்குமதி செய்கின்றனர். கோவிட்-19 பரவலால் அந்த நாடுகளில் உற்பத்தி பாதிக்கப்பட்டு சமையல் எண்ணெய் ஏற்றுமதியில் வீழ்ச்சி ஏற்பட்டது.

இந்திய சமையல் எண்ணெய்க்கு பெருமளவில் இறக்குமதியை நம்பி இருப்பதாலும் கோவிட் காலத்தில் பாம் ஆயிலில் இருந்து ரிபைன்டு எண்ணெய்க்கு பயனாளிகள் பெருமளவில் மாறியதாலும் தற்போதய தேவை அதிகரித்துள்ளது.இந்த நிலையில் இறக்குமதி பற்றாக்குறையால் சமையல் எண்ணையின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

தமிழ்நாட்டில் அதிகம் பயன்படுத்தப்படும் எண்ணெய்களில் நல்லணெய், தேங்கா எண்ணெய்,கடலை எண்ணெயை விட பாம் ஆயில் விலை குறைவு என்பதால் சமையலுக்கு அதிகம் பேர் பாம் ஆயிலை உபயோகித்து வருகின்றனர்.

கடைகளில் விற்க படும் பாம் ஆயில் இந்தோனேஷியா மற்றும் மலேசியாவிலிருந்து கச்சா பாம் ஆயியாகவும் சுத்திகரிக்கப்பட்ட பாம் ஆயிலாகவும் இறக்குமதி செய்து நமது நாட்டில் விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் படிக்க:

தினமும் தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்வதால் கிடைக்கும் நன்மைகள்

விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக இந்தியாவில் பாமாயில் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்! - விவசாயிகள் சங்கம் கோரிக்கை!!

English Summary: The price of cooking oil has doubled in a year

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.