மக்களின் அன்றாட தேவைகளில் பெட்ரோல் டீசல் ஆகியவையும் ஒன்றாக மாறிவிட்டன. கடந்த சில வருடமாக மாதத்தில் ஒரு முறை என்ற அடிஒப்படையில் பெட்ரோல்,டீசல் விலை நிர்ணயம் செய்யும் இருந்தது. சர்வதேசஅளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.
இந்த போக்கு சுமார் 15 ஆண்டுகளாக நடந்து வந்தது. இதையடுத்து தினசரி அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலை நிரநயிக்கும் போக்கு அமலுக்கு வந்துள்ளது. எண்ணெய் நிறுவனங்களின் கையில் இந்த பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
பெட்ரோல், டீசல் விலையில் அதிரடியான மாற்றங்களை காண்பது குறிப்பிடத்தக்கது. இதனால் பெரும்பாலும் மக்களின் சிரமங்கள் அதிகரித்துள்ளன. பெட்ரோல்,டீசல் விலையில் சிறிதளவு இறக்கம் ஏற்பட்டு அதிகளவில் ஏற்றத்தை காணமுடிகிறது.
கடந்த சில நாட்களாக பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருவதால் பிற அத்தியாவசிய பொருட்களின் விளையும் அதிகரித்து வரும் சூழலும் உணடாகியுள்ளது. இந்த நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை பார்க்கலாம். இன்று சென்னையில் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூ.98.96 ஆக விற்கப்படுகிறது.
டீசல் விலையை பொறுத்தவரை நேற்றைய விலையிலுருந்து எந்த வித மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.93.26 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இரண்டு வாரங்களாக விலையில் எந்த வித மாற்றமும் செய்யப்பட வில்லை.
மேலும் படிக்க:
வேலையில்லாத இளைஞருக்கு ரூ.3000 - முதலமைச்சர் அறிவிப்பு!
குடிசைகளே இல்லாத தமிழகம்: நிலம், வீடு வழங்கும் திட்டத்திற்கு சிறப்புப் பணிப்பிரிவு