News

Saturday, 12 December 2020 09:33 PM , by: KJ Staff

Credit : Tomorrow Makers

பிஎஃப் வட்டியை (PF Interest) செலுத்துவதற்கு சில தினங்களில் ஒப்புதல் கிடைக்கலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு இறுதிக்குள் 8.5% வட்டியை செலுத்துவதற்கான முன்மொழிதலை நிதியமைச்சகத்தின் ஒப்புதல் பெறுவதற்காக தொழிலாளர் அமைச்சகம் அனுப்பி வைத்தது. இதற்கு இன்னும் சில தினங்களில் நிதியமைச்சகத்தின் ஒப்புதல் (Permission) கிடைத்து விடும் என அதிகாரிகள் வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. அப்படி ஒப்புதல் கிடைத்து விட்டால், அதன் மூலம் 19 கோடி பேர் பயனடைவர்.

வட்டி விகிதம் 8.5%

இதன் காரணமாக இம்மாத இறுதிக்குள் அனைவருக்கும், பிஎஃப் தொகைக்கு 8.5% வட்டி செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் மாதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் (EPFO) அறங்காவலர் கூட்டம் நடைபெற்றது. தொழிலாளர் துறை அமைச்சர் சந்தோஷ் கங்வார் (Santhosh Gangwar) இக்கூட்டத்துக்கு தலைமை வகித்தார். அப்போது, 2019-20ஆம் ஆண்டுக்கு 8.5% வட்டி செலுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.

விரைவில் PF:

கொரோனா வைரஸ் (Corona) பெருந்தொற்று நோய் காலத்தில் ஏராளமானோர், மோசமான நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்றனர். எனவே, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி கணக்குகளுக்கு 8.5% வட்டி வழங்குவதற்கு மத்திய அரசிடம் அறங்காவலர் குழு பரிந்துரைத்திருந்தது. அதன்படி, 8.5% வட்டியை இரு தவணைகளாக (Installment) பிரித்து செலுத்த சமீபத்தில் முடிவு செய்யப்பட்டது.

தொழிலாளர்கள் வருங்கால வைப்பு நிதியில் வைக்கும் தொகை பங்குச்சந்தை, அரசு பத்திரங்கள், மியூச்சுவல் ஃபண்ட் (Mutual Fund) ஆகியவற்றில் முதலீடு செய்யப்படும். அதிலிருந்து கிடைக்கும் வருமானத்தில் இருந்து பயனாளர்களுக்கு தொகை வழங்கப்படும். இடிஎஃப் முதலீட்டில் முதல் நல்ல வருமானம் கிடைத்துள்ளதால் ஒரே தவணையில் பிஎஃப் பயனாளர்களுக்கு வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

70% மானியத்தில் ஆழ்கடல் மீன்பிடி படகுகள்! முதல்வர் தொடங்கி வைத்தார்!

கோடிக்கணக்கில் சம்பாதிக்க எளிய வழி முதலீடு தான்! நிபுணர்கள் கருத்து!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)