1. செய்திகள்

கோடிக்கணக்கில் சம்பாதிக்க எளிய வழி முதலீடு தான்! நிபுணர்கள் கருத்து!

KJ Staff
KJ Staff
To earn Money

Credit : Economic Times

அமர்ந்த இடத்தில் இருந்துகொண்டே எந்த வேலையும் செய்யாமல் கோடிகளில் சம்பாதிக்க முடியுமா? முடியும். அதற்கு நிலையான தொடர்ச்சியான முதலீடு (Investment) தேவை. மிக விரைவில் கோடீஸ்வரர் ஆவதற்கு உள்ள சில வழிகள் குறித்து நிபுணர்கள் கூறுகின்றனர்.

மாதச் சம்பளம் மட்டும் போதுமா?

ஒவ்வொரு உழைக்கும் மனிதனும் வீடு, சுகாதாரம், கல்வி, திருமணம், குழந்தைகள் மற்றும் பல்வேறு செலவுகள் மற்றும் முழு குடும்பத்தின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய அளவுக்கு ஒரு பெரிய தொகையை தேடுகிறான். இருந்தாலும் அதை அடைவது சாதாரண விஷயம் அல்ல. லட்சங்களில் புரளுவதற்கு வேலை (Job) மட்டும் போதாது. ஏனென்றால் நாட்கள் செல்லச் செல்ல வாங்கும் சம்பளத்துக்கு (Salary) ஏற்றாற்போல செலவுகளும் அதிகரித்துக் கொண்டே தான் செல்கின்றன. அதுவே பணவீக்கம் (Inflation). பணவீக்கத்தை கருத்தில் கொண்டு நீங்கள் வாங்கும் சம்பளம் மற்றும் செலவுகளை நிர்வகிக்க வேண்டும்.

தேவையான பணம் எவ்வளவு?

உங்களது வாழ்க்கையில் அன்றாடச் செலவுகள் மற்றும் தேவைகள் அனைத்தையும் பூர்த்தி செய்ய உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும்? ஒவ்வொருவருக்கும் ஒரு தேவை இருக்கும். அதுவும் இந்த கொரோனா (Corona) போன்ற இக்கட்டான சமயங்களில் உங்களது பணத் தேவை இன்னும் அதிகமாகவே இருக்கும். கொரோனாவால் ஏராளமான மக்கள் வேலையை இழந்து விட்டனர். பலருக்கு சம்பளம் இல்லாமல் போய்விட்டது. எனவே இதுபோன்ற சமயங்களில் சேமிப்பு (Savings) அல்லது முதலீடு (Investment) என்பது உங்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். உங்களிடம் உள்ள சிறிய தொகையை முதலீடு செய்யத் தொடங்கலாம்.

அதிக பணம் சம்பாதிக்க முடியுமா?

நம் அனைவருக்குமே தேவைக்கேற்ற பணம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். இந்த இலக்கு நல்லது தான். ரூ.1 கோடி அல்லது அதற்கு மேல் சம்பாதிப்பது எப்படி? நீங்கள் மாதந்தோறும் பெரிய தொகையைச் சேமிக்க வேண்டும். பின்னர் அதே லாபத்தை ஈட்டக்கூடிய இடங்களில் முதலீடு (Investment) செய்யுங்கள். நீங்கள் முதலீடு செய்யும் போதெல்லாம் அதில் ஆபத்தும் இருக்கும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். சில முதலீடுகளில் அதிக ஆபத்துகளும் (Dangerous) சில முதலீடுகளில் குறைந்த ஆபத்துகளும் இருக்கும்.

என்ன செய்ய வேண்டும்?

உங்களுக்கு 30 வயது என்று வைத்துக்கொள்வோம். நீங்கள் பத்தே ஆண்டுகளில் கோடீஸ்வரன் ஆகிவிடலாம். அதாவது உங்களது 40ஆவது வயதில் ரூ.2 கோடி முதல் ரூ.3 கோடி வரையில் சம்பாதிக்க முடியும். நீங்கள் ஒரு ஆண்டுக்கு பங்கு முதலீட்டில் ரூ.5.9 லட்சம் முதலீடு செய்வதாக இருந்தால், 10 ஆண்டுகளில் 13 சதவீத ரிட்டன் லாபத்தில் உங்களுக்கு மொத்தம் 20 லட்சம் லாபம் கிடைக்கும். இன்னும் ரூ.1.80 கோடிக்கு என்ன செய்வது? அதற்கு 10 ஆண்டுகளுக்கு ரூ.53 லட்சத்தை 13 சதவீத ரிட்டன் லாபத்தில் முதலீடு செய்ய வேண்டும். ஒரு பெரிய தொகையாக இல்லாமல் ஒவ்வொரு வருடமும் முதலீடு செய்ய விரும்பினால் நீங்கள் ரூ.10 லட்சத்தை ஒவ்வொரு ஆண்டும் முதலீடு செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் உங்களால் 10 ஆண்டுகளில் ரூ.2 கோடி சம்பாதிக்க முடியும்.

எங்கு, எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பதை தெளிவாக உணருங்கள். அதிக அக்கறையுடனும், கவனமுடனும் இருக்க வேண்டியது அவசியம். நிபுணர்களின் கருத்துக்களை மட்டும் நம்பி முடிவெடுக்காமல், அனுபவசாலிகளிடம் தகவல்களை கேட்டறிந்து முதலீடு செய்வது நன்று.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

குறைந்த விலையில் அடுக்குமாடி வீடு வழங்கும் திட்டம்! 1.50 இலட்சம் மானியம்!

வங்கியில் சேமிப்பவரா நீங்கள்? ஃபிக்ஸட் டெபாசிட்டில் இலாபம்! வட்டி விகிதத்தை அதிகரித்தது கனரா வங்கி!

English Summary: The simplest way to earn millions is to invest! Experts comment!

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.