PM கிசான் 12 தவணை வரும் தேதி அரசால் அறிவிப்பு, சமையல் சிலிண்டரை இனி ரேஷன் கடைகளில் சிலிண்டரை வாங்கலாம்! புதிய வசதி நடைமுறை, ரேஷன் கார்டில் இன்றே அப்டேட் செய்யுங்க! இல்லையெனில் ரேஷன் பொருள் கிடைக்காது, வீடு கட்ட ரூ.2.5 லட்சம் மானியம்: இன்றே உங்கள் பெயரைச் சரிபாருங்கள், கிரிஷி உன்னதி சம்மேளன் 2022: மாபெரும் வேளாண் கண்காட்சி அக்டோபரில் தொடக்கம், தமிழக்த்தில் 22 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை ஆகிய வேளாண் தகவல்களை இப்பதிவு வழங்குகிறது.
PM கிசான் 12 தவணை வரும் தேதி அரசால் அறிவிப்பு!
பிஎம் கிசான் திட்டத்தில் விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய 12-வது தவணைத்தொகை இன்னும் 10 நாட்களில் அவர்களது வங்கிக்கணக்கில் செலுத்தப்பட உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது. அதாவது PM கிசான் 12 தவணை பணம் வரும் அக்டோபர் 17-ஆம் தேதியில் வர இருக்கிறது என மத்திய அரசு அறிவித்துள்ளது. பிஎம் கிசான் திட்டத்தில் பயனாளிகளுக்கு அடுத்த கட்டத் தொகை வங்கிக் கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே கொடுக்கப்படும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனவே விவசாயிகள் கூடுதல் கவனம் செலுத்தி, உங்கள் வங்கிக்கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டிருக்கிறதா என்பதை உறுதி செய்து கொள்ளவும்.
சமையல் சிலிண்டரை இனி ரேஷன் கடைகளில் சிலிண்டரை வாங்கலாம்! இதைப் பெற முகவரிச்சான்று தேவையில்லை!!
தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் கேஸ் சிலிண்டர்கள் விற்பனைக்கு வரும் என்று கூட்டுறவுத் துறை சமீபத்தில் அறிவித்திருந்தது. இதை தொடர்ந்து, முன்னா மற்றும் சோட்டு என்கிற பெயரிலான புதிய வகை சிலிண்டர்கள் ரேஷன் கடைகளில் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்த அறிமுகத்தை முதற்கட்டமாக, சென்னை திருவல்லிக்கேணியில் அமைக்கப்பட்டிருக்கும் நகர கூட்டுறவு சங்கத்தின் காமதேனு பால் பொருள் அங்காடியில் விற்பனை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை ரூ.958 விலைக்கும், ஐந்து கிலோ சமையல் கேஸ் சிலிண்டரை ரூ.1515 விலைக்கும் நுகர்வோர் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. அதோடு, இதனைப் பெற்றுக்கொள்ள முகவரி சான்று தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
ரேஷன் கார்டில் இன்றே அப்டேட் செய்யுங்க! இல்லையெனில் ரேஷன் பொருள் கிடைக்காது!!
ரேஷன் கார்டுதாரர்கள் அனைவரும் இந்த அப்டேட்டை செய்யாவிட்டால் அவர்களுக்கு ரேஷன் உதவி கிடைக்காமல் போகும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ரேஷன் கார்டுதாரர்கள் தங்களது ரேஷன் அட்டையில் குடும்ப உறுப்பினர்கள் போன்ற விவரங்களை அப்டேட்டாக வைத்திருப்பது அவசியம். அதை விட மிக முக்கியமானதாக இருப்பது மொபைல் நம்பர் ஆகும். எனவே உங்களுடைய மொபைல் நம்பர் ஒருவேளை மாறியிருந்தால் உடனடியாக ரேஷன் கார்டில் அப்டேட் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. இதற்கு https://www.tnpds.gov.in/ என்ற இணையதளப்பக்கத்தில் அப்டேட் செய்யலாம்.
வீடு கட்ட ரூ.2.5 லட்சம் மானியம்: இன்றே உங்கள் பெயரைச் சரிபாருங்கள்!!
மத்திய அரசின் இந்தத் திட்டத்தின் கீழ் ரூ.2.5 லட்சம் மானிய உதவி வழங்கப்படுகிறது. பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ், அரசு தரப்பிலிருந்து மக்களுக்கு வீடு கட்ட கடன் மானியம் வழங்கப்படுகிறது. ஏராளமானோர், இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெற்றுள்ளனர். இத்திட்டத்தில் உங்கள் பெயரைச் சரிபார்க்க வேண்டுமானால் ஆன்லைனிலேயே சரிபார்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2.5 லட்சம் மானியம் தொகை மூன்று தவணைகளில் வழங்கப்படும் எனக் கூறப்படுகிறது. முதல் தவணையாக 50,000. இரண்டாவது தவணையாக 1.50 லட்சம். அதே சமயம் மூன்றாம் தவணையாக 50,000 வழங்கப்படுகிறது.
கிரிஷி உன்னதி சம்மேளன் 2022: மாபெரும் வேளாண் கண்காட்சி அக்டோபரில் தொடக்கம்!
கிரிஷி ஜாக்ரன், செஞ்சுரியன் பல்கலைக்கழகத்தின் எம் எஸ் சுவாமிநாதன் வேளாண்மைப் பள்ளியுடன் இணைந்து, கிரிஷி உன்னதி சம்மேளனம் 2022 வரும் அக்டோபர் 17, 18 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. விவசாயிகள், விவசாய நிபுணர்கள், விவசாயத் தொழிலதிபர்கள் ஆகியோரை ஒரு மேடையில் ஒன்றிணைக்கும் முயற்சியாக இது நடத்தப்பட இருக்கிறது. டோங்ரியா பழங்குடியினரின் கலை மற்றும் கலாச்சாரம், உணவு மற்றும் விவசாய நடைமுறைகள் கண்காட்சியின் சிறப்பு அம்சமாக இருக்கும். அதோடு, டோங்ரியா பழங்குடியினரின் கையால் நெய்யப்பட்ட கைத்தறி மற்றும் கைவினைப்பொருட்கள் காட்சிப்படுத்தப்பட இருக்கின்றன.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை!
தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலவும் வலிமண்டலக் கீழடுக்குச் சுழற்சி காரணமாக சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர் உட்பட தமிழகத்தின் 22 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. எனவே, விவசாயிகள் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. அதோடு, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக் கடல் மன்னார் வளைகுடா, தென் தமிழகக் கடலோரம் ஆகிய பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாமென வானிலை மையம் கேட்டுக்கொண்டுள்ளது.
மேலும் படிக்க
50% மானியத்தில் வேளாண் இயந்திரம் பெறுங்கள்!
விவசாயிகள் வங்கி கணக்கில் மானியக் கடன்: விரைவாக விண்ணப்பிக்கவும்!