News

Wednesday, 03 March 2021 08:45 AM , by: Daisy Rose Mary

விவசாயிகளுக்கு உதவும் வகையில் வழங்கப்பட்டு வரும் பி.எம் கிசான் திட்டத்தின் 7 தவணைகள் முடிந்துள்ள நிலையில், 8 வது தவணை விரைவில் விடுவிக்கப்படவுள்ளதாக மத்திய அரசு வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகள், தங்கள் பெயர் உள்ளதா இல்லையா என்பதை பயனாளிகளின் பட்டியல் மூலம் அறியலாம்.

பி.எம். கிசான் திட்டம்

நாட்டின் விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த 2018 ஆம் பி.எம் கிசான் திட்டத்தை PM Kisan Yojana அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் சுமார் 11 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் இது வரை இணைக்கப்பட்டுள்ளனர். இந்த திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 வழங்கப்படுகிறது. இந்த தொகை ஒவ்வொரு நான்கு மாதங்களுக்கும் ஒரு இடைவெளியில் ரூ.2,000 தவணை முறையில் விவசாயிகளுக்கு அனுப்பப்படுகிறது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் சுமார் 33 லட்சம் போலி பயனாளிகள் இந்த திட்டத்தில் இணைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு அனுப்ப இருந்த 59.11 லட்சம் ரூபாய் பணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மறுபுறம், 2,326 கோடி பணம் தகுதியற்ற பயனாளிகளின் கணக்குகளுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதனை போலி கணக்காளர்களிடம் இருந்து மீட்க அரசு முயற்சித்து வருகிறது.

8வது தவணை

பி.எம் கிசான் திட்டத்தின் 7-வது தவணை கடந்த 2020ம் ஆண்டு டிசம்பர் 25 அன்று வெளியிடப்பட்டது பிரதமர் நரேந்திர மோடி வீடியோ கான்பரன்சிங் மூலம் ரூ.18,000 கோடியை சுமார் 9 கோடிக்கும் அதிகமான விவசாயிகளுக்கு வழங்கினார். இதைத்தொடர்ந்து 8வது தவணை விரைவில் விடுவிக்கப்படடும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பயனாளிகளின் பட்டியல்

பி.எம் கிசான் திட்ட பயனாளிகளின் பட்டியலை மத்திய அரசு pmkisan.gov.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ளது. இதன் மூலம் 8-வது தவணை யாருக்கு கிடைக்கும் என்ற விவரங்களை விவசாயிகள் அறியலாம்.

PM-Kisan நிலையை ஆன்லைனில் அறிய

பி.எம் கிசான் நிலை மற்றும் பிற விவரங்களை சரிபார்க்க கீழே கொடுக்கப்பட்டுள்ள படிகளைப் பின்பற்றவும்

  • முதலில் https://pmkisan.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ அரசாங்க வலைத்தளத்திற்குச் செல்லுங்கள்

  • முன்பு Farmers Corner ல், beneficiary status என்பதை பாருங்கள்

  • பின் beneficiary status கிளிக் செய்து உங்கள் ஆதார் எண் அல்லது கணக்கு எண் அல்லது மொபைல் எண்ணை உள்ளிடவும்.

  • பின்னர் Get Data ஐக் கிளிக் செய்க

  • நிலை திரையில் காண்பிக்கப்படும்

மேலும் படிக்க... 

அரசின் மானியத் தகவல்களை உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!

விவசாயிகள் கடன் பெற உதவும் கிசான் கிரெடிட் கார்டு! - விண்ணப்பிப்பது எப்படி?

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)