Krishi Jagran Tamil
Menu Close Menu

மத்திய அரசின் மானியத் தகவல்கள் அனைத்தும் உங்கள் கைகளுக்குக் கொண்டு வரும் "PM Kisan Mobile App"!!

Tuesday, 04 August 2020 05:50 PM , by: Daisy Rose Mary
How to download Pm kisan app

விவசாயிகளின் நலனுக்காக மத்திய அரசு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. இதனை விவசாயிகள் எளிய முறையில் அறிந்துகொள்ளப் பல மொபைல் ஆப்-களையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. அத்தகைய ஒரு பயனுள்ள மொபைல் ஆப்-தான் பி.எம் கிசான் மொபைல் ஆப் (PM-Kisan Mobile app) இந்த செயலி மூலம் PM-Kisan அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் அனைத்து அம்சங்களும் வசதிகளும் இதில் பெறலாம்.

பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா (PM Kisan Samman Nidhi Yojana)
திட்டமான மத்திய அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்ட விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6000 கிடைக்க வழிவகை செய்கிறது. இவை மூன்று தவணையாக தலா ரூ. 2000 வீதம் விவசாய பயனாளர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறது.

இந்த பயனை விவசாயிகள் பெற பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா திட்டத்தில் தங்களை பதிவு செய்துகொள்ளுவது அவசியமாகிறது. இந்த திட்டத்தில் விவசாயிகள் எளிய முறையில் தங்களைப் பதிவு செய்துகொள்ள ஏதுவாக PM Kisan Mobile App அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழ்க்கண்டவற்றைச் செய்யலாம்

 • புதிய விவசாயிகள் பதிவு செய்தல் (New farmer registration)

 • பயனாளி நிலைமை (Beneficiary Status)

 • ஆதார் விவரங்களைத் திருத்துதல் (Edit Aadhaar details)

 • சுய பதிவு செய்யப்பட்ட விவசாயிகளின் நிலைமை (Status of self registered farmers)

 • பிரதமர் கிசான் ஹெல்ப்லைன் (PM Kisan helpline)

How to downlaod pm kisan app

PM Kisan Mobile App-ஐ டவுன்லோட் செய்வது எப்படி?

PM கிசான் மொபைல் ஆப்-பை கீழே வழங்கப்பட்டுள்ள படிகளின் மூலம் டவுன்லோட் செய்யலாம்

 • உங்கள் மொபைலில் பிளே ஸ்டோர் (Play store) பயன்பாட்டிற்குச் செல்லவும்.

 •  அதன் பிறகு நீங்கள் PM-Kisan Mobile app-யை டைப் செய்யவேண்டும்

 • பிஎம்-கிசான் மொபைல் ஆப் திரையில் திரையில் வந்த பின்பு அதனை டவுன்லோட் செய்யுங்கள்

PM-Kisan Mobile app, Play store-ல் கிடைக்கவில்லை என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பிலிருந்து நேரடியாக பதிவிறக்கம் செய்யலாம்.

நேரடியாக டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்

PM கிசான் நிலைமை / பட்டியலை எவ்வாறு சரிபார்க்கலாம்

 • உங்கள் பொபைலில் PM கிசான் ஆப்-பை திறந்த பின் Beneficiary என்பதை கிளிக் செய்க.

 • பின்னர் ID type - ஆதார் எண் அல்லது மொபைல் எண் அல்லது கணக்கு எண் என்பதை தேர்ந்தெடுத்து அதனை உள்ளீடுக.

 • இதன் பின் உங்கள் பிரதமர் கிசான் பயனாளி நிலைமை (beneficiary status) திரையில் வரும்.

மேலும் விவரங்களுக்கு, https://www.pmkisan.gov.in/

மேலும் படிக்க...

குறைந்த முதலீடு - நிறைந்த வருமானம் - சிறு சிறு தொழில் செய்யலாம் வாங்க!!

LIC வழங்கும் குறைந்த EMI-யில் வீட்டுக்கடன் திட்டம்! 6.90% வட்டி மட்டுமே!!

Jan Dhan Yojana: ஜன் தன் திட்டம் குறித்து அறிந்து கொள்ள மாநில அளவிலான இலவச உதவி என்கள்!

 

PM - Kisan pradhan manthiri Kisan Samman Nidhi Yojana PM-Kisan Mobile app பி.எம் கிசான் மொபைல் ஆப் பிரதமரின் கிசான் சம்மான் நிதி யோஜனா Kisan credit card
English Summary: You can now Register, Check status and details through PM-Kisan Mobile App

Share your comments


Krishi Jagran Tamil Magazine Subscription Online Subscription


Latest Stories

 1. தமிழகத்தில் நடப்பாண்டு வடகிழக்குப் பருவமழை சராசரியாக இருக்கும்- TNAUவின் முன்னறிவிப்பு!
 2. பாரம்பரிய காய்கறி சாகுபடிக்கு ரூ.15,000மானியம்- விவசாயிகளுக்கு அழைப்பு!
 3. மிளகாய் வற்றலுக்கு ரூ.9000/- வரை கிடைக்கும்- TNAUவின் விலை முன்னறிவிப்பு!
 4. அங்ககச் சான்று பெறுவது எப்படி? எளிய வழிமுறைகள்!
 5. 100% மானியத்தில் நாட்டு கோழி வளர்ப்பு : பெண் பயனாளிகள் செப்., 29க்குள் விண்ணப்பிக்கலாம்!!
 6. நாடாளுமன்றத்தில் விவசாயம் தொடர்பான 3 மசோதாக்கள் நிறைவேற்றம்! விவசாயிகளுக்கு பயனளிக்குமா?
 7. வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் தமிழகத்தில் மழை வாய்ப்பு- வானிலை மையம்!!
 8. தென்னையில் இலைக்கருகல் நோய்- தீர்க்க என்ன வழி?
 9. பல சத்துக்களைக் கொண்ட சீம்பால்- கன்றுகளின் ஆரோக்கியத்திற்கு!
 10. தோட்டத்துத் தேவதைகள் பற்றித் தெரியுமா உங்களுக்கு? விபரம் உள்ளே!

CopyRight - 2020 Krishi Jagran Media Group. All Rights Reserved.