புதுதில்லியில் நடைபெற்ற உலகளாவிய தினை (ஸ்ரீ அண்ணா) மாநாட்டில் கலந்து கொண்ட தமிழகத்தை சேர்ந்த 107 வயதான இயற்கை விவசாயி பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்களின் காலினை தொட்டு வணங்கி பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார். பிரதமரின் இச்செயல் ஸ்ரீ அண்ணா கூட்டத்தில் பங்கேற்றவர்களின் கவனத்தை ஈர்த்தது.
புது தில்லியில் நேற்று ‘உலகளாவிய தினை (ஸ்ரீ அண்ணா) மாநாடு’ நடைப்பெற்றது. மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, சர்வதேச தினை ஆண்டு (IYMI)-2023 தபால் தலை மற்றும் ரூ.75 நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார்.
முன்னதாக உலகளாவிய தினை மாநாட்டிற்கு பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாய பெருமக்களும் பங்கேற்றனர். அவர்களில் ஒருவராக தமிழகத்தை சேர்ந்த 107 வயதான இயற்கை விவசாயியும், இந்தியாவின் மிக உயரிய விருதுகளுள் ஒன்றான பத்மஸ்ரீ விருதையும் பெற்ற பாப்பாம்மாள் அவர்களும் பங்கேற்றார். பிரதமர் நரேந்திர மோடிக்கு சால்வை அணிவித்து பாப்பாம்மாள் அவர்கள் மரியாதை செலுத்தினார். இதனையடுத்து பிரதமர் மோடியும் பாப்பாம்மாள் அவர்களின் காலினை தொட்டு வணங்கினார். பிரதமரின் இந்த செயல் திணை மாநாட்டில் பங்கேற்ற விருந்தினர்கள், விவசாயிகள், அரசு உயர் அதிகாரிகள் என அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
மாநாட்டில் உரையாற்றிய மோடி, சர்வதேச திணை ஆண்டினை ஒரு உலகளாவிய இயக்கமாக ஊக்குவிக்க இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. “இன்று தேசிய உணவு உற்பத்தியில் தினைகள் 5-6 சதவீதம் மட்டுமே உள்ளன. அவற்றின் பங்கை அதிகரிக்க இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பண்ணை நிபுணர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்றார்.
அதற்கு அடையக்கூடிய இலக்குகளை நாம் நிர்ணயம் செய்ய வேண்டும்” என்று கூறிய பிரதமர், பாதகமான தட்பவெப்ப நிலைகளிலும், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் இல்லாமல், தினையை எளிதாக விளைவிக்க முடியும் என பிரதமர் தெரிவித்தார்.
மேலும், “இந்தியாவில் 12-13 மாநிலங்களில் தினை முதன்மையாக விளைகிறது. இருப்பினும், அந்த குறிப்பிட்ட மாநிலங்களில், ஒரு நபரின் உள்நாட்டு நுகர்வு மாதத்திற்கு 2-3 கிலோவுக்கு மேல் இதற்கு முன் இல்லை. தற்போது மாதம் 14 கிலோவாக அதிகரித்துள்ளது” என்றார்.
ஐக்கிய நாடுகள் சபையானது 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக அறிவித்துள்ளது. மேலும் இந்தியாவில் தினை விவசாயத்தை ஊக்குவிக்க இந்தியா பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.புகழ்பெற்ற இயற்கை விவசாயியான பத்மஸ்ரீ பாப்பம்மாள் அவர்களின் விவசாய பணியைப் பாராட்டி 2021 ஆம் ஆண்டில் மதிப்புமிக்க பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் காண்க:
PM MITRA திட்டத்தை செயல்படுத்த நிலமும், சிப்காட் நிறுவனமும் ரெடி.. முதல்வர் கோரிக்கை கடிதம்
அடுத்த 5 வருஷத்துக்கு.. பெட்ரோலுடன் எத்தனால்- அரசின் கொள்கை முடிவு வெளியீடு