1. செய்திகள்

உணவு பாதுகாப்பு குறித்த சவால்களுக்கு தினை தீர்வு தரும்- பிரதமர் மோடி நம்பிக்கை

Muthukrishnan Murugan
Muthukrishnan Murugan
PM Modi attended Global Millets Conference in Pusa

இந்தியாவின் முன்மொழிவு மற்றும் கடுமையான முயற்சிகளுக்குப் பிறகு, ஐக்கிய நாடுகள் சபை 2023 ஆம் ஆண்டை ‘சர்வதேச தினை ஆண்டாக’ அறிவித்தது எங்களுக்கு ஒரு பெரிய கவுரவம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

புது தில்லியில் இன்று ‘உலக தினை (ஸ்ரீ அண்ணா) மாநாடுநடைப்பெற்றது. மாநாட்டைத் தொடங்கி வைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, சர்வதேச தினை ஆண்டு (IYMI)-2023 தபால் தலை மற்றும் ரூ.75 நாணயத்தையும் பிரதமர் மோடி வெளியிட்டார். மோடி தன் உரையில் குறிப்பிட்ட விவரங்கள் பின்வருமாறு-

சர்வதேச திணை ஆண்டினை ஒரு உலகளாவிய இயக்கமாக ஊக்குவிக்க இந்தியா தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. “இன்று தேசிய உணவு உற்பத்தியில் தினைகள் 5-6 சதவீதம் மட்டுமே உள்ளன. அவற்றின் பங்கை அதிகரிக்க இந்திய விஞ்ஞானிகள் மற்றும் பண்ணை நிபுணர்கள் விரைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். அதற்கு அடையக்கூடிய இலக்குகளை நாம் நிர்ணயம் செய்ய வேண்டும்என்று கூறிய பிரதமர், பாதகமான தட்பவெப்ப நிலைகளிலும், இரசாயனங்கள் மற்றும் உரங்கள் இல்லாமல், தினையை எளிதாக விளைவிக்க முடியும் என்றார்.

இந்தியாவில் 12-13 மாநிலங்களில் தினை முதன்மையாக விளைகிறது. இருப்பினும், அந்த குறிப்பிட்ட மாநிலங்களில், ஒரு நபரின் உள்நாட்டு நுகர்வு மாதத்திற்கு 2-3 கிலோவுக்கு மேல் இதற்கு முன் இல்லை. தற்போது மாதம் 14 கிலோவாக அதிகரித்துள்ளதுஎன்றார்.

நாட்டில் உள்ள 2.5 கோடி சிறு மற்றும் குறு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு பயனளிப்பதோடு, உணவு பாதுகாப்பு சவால்களை கையாள்வதில் தினைகள் முக்கிய பங்காற்ற முடியும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார். குளோபல் மில்லட்ஸ் (ஸ்ரீ அன்ணா) மாநாடு போன்ற நிகழ்வுகள் உலகளாவிய நன்மைக்கு மட்டுமல்ல, உலகளாவிய நன்மை குறித்த இந்தியாவின் பொறுப்புணர்வின் அடையாளமாகவும் உள்ளது என்று அவர் கூறினார்.

நாம் ஒரு தீர்மானத்தை முன்னோக்கி எடுக்கும்போது, அதை முழுமைக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பும் சமமாக முக்கியமானது. இன்று உலகம் ‘சர்வதேச தினை ஆண்டைகொண்டாடும் போது, இந்தியா இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்தியாவின் 75 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் இன்று இந்த விழாவில் எங்களுடன் கிட்டத்தட்ட கலந்துகொண்டுள்ளனர், இது அதன் முக்கியத்துவத்தை காட்டுகிறது என்றும் பிரதமர் தன் உரையில் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட ஒன்றிய விவசாயம் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர், பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் தான் 2023 ஆம் ஆண்டை சர்வதேச தினை ஆண்டாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது என்றார்.

மேலும் காண்க:

அடுத்த 5 வருஷத்துக்கு.. பெட்ரோலுடன் எத்தனால்- அரசின் கொள்கை முடிவு வெளியீடு

PM MITRA- தமிழகத்திற்கு பச்சைக் கொடி காட்டிய மோடி.. நன்றி தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்

English Summary: PM Modi attended Global Millets Conference in Pusa Published on: 18 March 2023, 04:35 IST

Like this article?

Hey! I am Muthukrishnan Murugan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.