News

Thursday, 05 November 2020 10:40 AM , by: Elavarse Sivakumar

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய வரும் 30ம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது

இது குறித்து சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

  • சிவகங்கை மாவட்டத்தில் பிரதமரின் பயிர் காப்பீடு திட்டம் கடந்த 5 ஆண்டுகளாக தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

  • இதுவரை இந்த திட்டத்தின் மூலம் பயிர் காப்பீடு இழப்பீட்டு தொகையாக ரூ.831 கோடி விவசாயிகளுக்கு பெற்று வழங்கப்பட்டுள்ளது.

  • புதுப்பிக்கப்பட்ட பிரதமரின் பயிர் காப்பீடு திட்டத்தின்  (Pradhan Mantri Fasal Bima Yojana) வழிகாட்டு நெறிமுறைகளின்படி இந்த மாவட்டத்தில் நடப்பு பருவத்தின் நெல் சாகுபடி செய்துள்ள அனைத்து விவசாயி களும் இத்திட்டத்தில் இணைய தகுதிய பெற்றுள்ளனர்.

  • மேலும், வங்கிகள் மற்றும் கூட்டுறவு கடன் வங்கிகளில் பயிர் கடன் பெறும் விவசாயிகள் அவரவர் விருப்பத்தின் அடிப்படையில் காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

  • விருப்பம் இல்லாதவர்கள், காப்பீடு பதிவிலிருந்து விலக்கு பெறுவதற்கான எழுத்துப்பூர்வமான அறிவிப்பு படிவத்தை கடன் பெறும் வங்கிகளிலேயே சமர்ப்பிக்கவும் வாய்ப்பு அளிக்கப் பட்டுள்ளது.

  • சிவகங்கை மாவட்டத்தில் பயிர் காப்பீடு பதிவிற்கு வழங்கப்பட்டுள்ள சிறப்பு பயிர் காப்பீட்டு அடங்கல் சான்றிதழை, கிராம நிர்வாக அலுவலர்களிடமிருந்து பெற்று, அரசால் மானியத்துடன் நிர்ணயிக்கப்பட்டுள்ள காப்பீடு பிரிமியம் தொகை ஒரு ஏக்கருக்கு ரூ.324.31 தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் வங்கிகள் மற்றும் பொது சேவை மையங்களில் இம்மாதம் 30ந் தேதி வரை காப்பீடு பதிவு செய்து கொள்ளலாம்.

  • பதிவு செய்யும்போது அடங்கல், ஆதார், காப்பீடு பதிவிற்கான விண்ணப்பம், வங்கி புத்தகம் உள்ளிட்ட ஆவணங்களை கொடுக்க வேண்டும்.

  • காப்பீடு பதிவு செய்யப்படும் வங்கி அல்லது பொது சேவை மையங்களில் அடங்கலில் உள்ள வருவாய் கிராமங்கள், சாகுபடி பரப்பு விவரங்கள், வங்கி கணக்கு எண் முதலான அடிப்படை விவரங்கள் காப்பீடு பதிவேற்ற வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டதற்கான ஒப்புகைச் சீட்டினை சரிபார்த்து பெற்றுக் கொள்ள வேண்டும்.

  • மேலும், காப்பீடு பதிவின் ஆவணங்களின் ஒரு நகலினை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

  • சம்பா நெல் பயிருக்கு காப்பீடு பிரிமியம் செலுத்தி, பதிவு செய்ய வரும் 30ந் தேதி வரை காலவரையறை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • விவசாயிகள் கடைசி நேர கூட்ட நெரிசலால் காப்பீடு பதிவேற்றம் செய்வதில் ஏற்படும் சிரமங்களை தவிர்த்திடும் பொருட்டு, காப்பீடு கட்டணம் செலுத்த இறுதி நாள்வரை காத்திருக்காமல், முன் கூட்டியே காப்பீடு பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க...

இருமடங்கு சாகுபடி தரும் திருந்திய நெல் சாகுபடி!

தமிழகத்தில் விவசாயத்திற்கான இலவச மின்வினியோக நேரம் மாற்றம்!

நெற்பயிரைத் தாக்கும் குருத்துப்பூச்சி -கட்டுப்படுத்தும் வழிமுறைகள்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)