மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 29 March, 2021 10:46 AM IST

உங்கள் வங்கிக்கணக்கில் காசே இல்லாவிட்டாலும், ரூ.5 ஆயிரம் ரூபாய் வரை எடுக்க நீங்கள் இந்தக் கணக்கை வைத்திருக்க வேண்டும்.

வங்கிக் கணக்கு இல்லாத இந்தியக் குடிமகன் எவரும் இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டதுதான் இந்த வங்கிக் கணக்கு.

அப்படி என்ன கணக்கு. அதுதான் ஜன்தன் வங்கிக்கணக்கு. இது சாதாரண சேமிப்புக் கணக்கில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.

ஜன் தன் வங்கிக்கணக்கு (Jan Dhan Account)

வங்கிக்கணக்கு இல்லாத ஏழை மக்களுக்கு, வீட்டிற்கு ஒரு வங்கிக்கணக்கை உருவாக்கும் வகையில் மோடி அரசால், ஜன் தன் வங்கிக்கணக்குத் திட்டம் ( Jan Dhan Account) அறிமுகப்படுத்தப்பட்டது.

சேமிப்புக் கணக்கு அல்ல (Not a savings account)

இந்த திட்டத்தின் கீழ் இதுவரை, லட்சக்கணக்கான குடும்பத்தினருக்குக் காப்பீடு வசதியுடன் கூடிய வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டது. இதில் இதுவரை 53 சதவீதம் வங்கிக்கணக்குகள் பெண்களால் தொடங்கப்பட்டுள்ளன.ஆனால் இன்னமும் இது ஒரு சேமிப்பு கணக்கு என்றே மக்கள் தவறுதலாகப் புரிந்துகொண்டுள்ளனர்.

உண்மையில் இது சேமிப்பு கணக்கு அல்ல. அடிப்படையில் சேமிப்பு கணக்கில் இந்த திட்டம் வந்தாலும், சேமிப்பு கணக்கில் இல்லாத சில சிறப்பு சலுகைகளும் இந்த திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்

சிறப்பு காப்பீடு (Special insurance)

இந்த வங்கிக்கணக்கு தாரர்கள் குறைந்த பட்ச இருப்புத் தொகையை வைத்திருக்கத் தேவையில்லை. மாதத்திற்கு 4 முறை பணம் எடுத்துக்கொள்ளும் வசதி (Withdrawal), ஏடிஎம் கார்டு (ATM Card) இவற்றுடன் 30 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பீடும் வழங்கப்படுகிறது.

இது மட்டுமல்லாமல், கணக்கு தாரர், விபத்தில் சிக்கி மரணம் அடைய நேரிட்டால், 2 லட்சம் ரூபாய் வழங்க வகைசெய்யும் ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது.

ஓவர் டிராஃப்ட் (Overdraft)

இந்த திட்டத்தின்படி 5 ஆயிரம் ரூபாய் வரை ஓவர் டிராஃப்ட் (Over Draft) எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த வங்கிக்கணக்கில், பணம் கையிருப்பு இல்லாத போதிலும் (Zero Balance) 5 ஆயிரம் ரூபாய் ஓவர் டிராஃப்ட் எடுத்துக்கொள்ளும் வசதியைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

நிபந்தனை (Condition)

  • இந்த வசதியைப் பயன்படுத்திக்கொள்ள உங்கள் ஜன் தன் வங்கிக்கணக்கு, ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்க வேண்டியது கட்டாயம்.

  • ஜன் தன் வங்கிக்கணக்கு தொடங்கப்பட்டு ஆறு மாதங்கள் நிறைவடைந்திருந்தாலே போதும். இந்த வசதியை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள முடியும்.

  • இந்த ஆறு மாதங்களில், வங்கிக்கணக்கில் பணம் கையிருப்பைப் பராமரித்திருக்க வேண்டியதும், பணப்பரிமாற்றம் செய்திருக்க வேண்டியதும் அவசியம்.

  • சாதாரணமாக வங்கிக்கணக்கு தொடங்கத் தேவைப்படும் ஆவணங்கள் (Documents) மட்டும் போதும். ஜன் தன் கணக்கு தொடங்க போதுமானது வேறு எந்த ஆவணங்களும் தேவையில்லை.

  • கணக்கு தொடங்கி 36 மாதங்களுக்குள் எப்போது வேண்டுமானாலும் இந்த சலுகையைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

  • ஜன் தன் கணக்கு வைத்திருக்கும் பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

வட்டி (Interest)

இந்த ஓவர் டிராஃப்ட் வசதி மூலம் கிடைக்கும் தொகைக்கு 2 சதவீத வட்டி விதிக்கப்படுகிறது.

மேலும் படிக்க...

கடன்களிலிருந்து எப்படி வரியை சேமிக்கலாம்! சில உதவிக்குறிப்புகள்.!

SBI வங்கியில் டெபிட் கார்டு இல்லாமல் ATM-ல் பணம் எடுக்கலாம்! எளிய வழிமுறை!

பெரிய வங்கிகளை விஞ்சும் சிறிய வங்கிகள்! - SBI விட அதிக வட்டி விகிதம் வழங்கும் ஸ்மால் வங்கி!!

English Summary: PMJDY: Even if you don't have money in your bank account, you can withdraw Rs 5,000!
Published on: 29 March 2021, 10:42 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now