தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களை மகிழ்ச்சி அடையச் செய்துள்ளது.
தைப் பொங்கல் பண்டிகை ஜனவரி 14ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக, ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசுத்துறையில் பணியாற்றி வரும் ஊழியர்களுக்கு தமிழக அரசு சார்பில் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், அரசு ஊழியர்களுக்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் போனஸ் தொகை தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
போனஸ்
அதன்படி, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து சி மற்றும் டி பிரிவு அரசு பணியாளர்களுக்கும் சிறப்பு தற்காலிக மிகை ஊதியம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மிகை ஊதியம்
தமிழக அரசுப்பணியில் சி மற்றும் டி பிரிவில் உள்ள ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூ.3,000 மிகை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முழு மற்றும் பகுதிநேர பணியாளர்களுக்கு ரூ.1000 சிறப்பு மிகை ஊதியம் வழங்கப்படும். சி, டி பிரிவைச் சேர்ந்த ஓய்வூதியதாரர்கள், தனி என அனைத்து ஓய்வூதியதாரர்களுக்கும் ரூ.500 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க…
காய்கறி சாகுபடிக்கு ரூ.80,000 மானியம்- தொடர்பு தொலைபேசி எண்கள் அறிவிப்பு!
மத்திய அரசு வழங்கும் ரூ.10,000-Check செய்வது எப்படி?