News

Monday, 09 January 2023 08:02 AM , by: R. Balakrishnan

Pongal Gift 1000 rs

தமிழக மக்கள் பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடும் வகையில், 2 கோடியே 19 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை ஆகியவற்றுடன் ரூ.1,000 ரொக்கத்தொகை வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே அறிவித்திருந்தார். ஆனால், பொங்கல் பரிசுடன் முழு கரும்பையும் சேர்த்து வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினரும், கரும்பு விவசாயிகளும் கோரிக்கை விடுத்தனர். அதைத் தொடர்ந்து, 6 அடி நீளம் கொண்ட முழு கரும்பும் பொங்கல் பரிசுடன் கூடுதலாக வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

பொங்கல் பரிசு (Pongal Gift)

பொங்கல் பரிசுக்காக தமிழக அரசு ரூ.2 ஆயிரத்து 429 கோடி நிதியை ஒதுக்கியது. மொத்தம் உள்ள 33 ஆயிரம் ரேஷன் கடைகளிலும் தடையில்லாமல் பொங்கல் பரிசு தொகுப்பு வினியோகிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வந்தன. கூட்ட நெரிசலை தவிர்க்க, தெரு வாரியாக வீடு, வீடாக சென்று டோக்கன்கள் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது. 95 சதவீத பணிகள் நிறைவடைந்து விட்டன.

இந்நிலையில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு தொடங்கிவைக்கிறார். கவர்னர் உரையுடன் சட்டசபை கூட்டம் இன்று தொடங்குவதால், தலைமைச் செயலகத்துக்கு அருகே போர் நினைவுச்சின்னம் எதிரே உள்ள அன்னை சத்யா நகர் ரேஷன் கடையில் இந்த திட்டத்தை அவர் தொடங்கிவைக்கிறார். அந்த கடைக்கான ரேஷன் அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் 20 பேருக்கு6 அடி உயர கரும்பு, ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோசர்க்கரை, ரூ.1,000 ரொக்கப்பணம் ஆகியவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

டோக்கன் வைத்திருப்பவர்களுக்கு இன்று முதல்12-ந் தேதி வரை குறிப்பிட்ட தேதியில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும். டோக்கன் இல்லாதவர்கள் 13-ந் தேதி முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதே பரிசு தொகுப்பு, இலங்கை தமிழர் மறுவாழ்வு மையங்களில் உள்ள குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து உள்ளது.

மேலும் படிக்க

தமிழக அரசின் திட்டங்களை அறிந்து கொள்ள உதவும் whatsapp: வழிமுறைகள் உள்ளே!

பொங்கல் பரிசு டோக்கன் இன்னும் கிடைக்கவில்லையா? உடனே இதைப் பண்ணுங்க!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)