தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு ஆண்டு தோறும் வழங்கப்படுகிறது. அந்த வகையில் 2023 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கப் பரிசுடன், மளிகை பொருட்கள் மஞ்சள் பைகளில் வழங்க அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
பொங்கல் பரிசு (Pongal Gift)
தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் அனைவரும் சிறப்பாக கொண்டாட அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கடந்த ஆண்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பல்வேறு வகையான மளிகை பொருட்கள் மற்றும் முழு கரும்பு உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து வர இருக்கும் பொங்கல் பண்டிகைக்கான பொங்கல் பரிசு குறித்து அரசு ஆலோசனை மேற்கொண்டு வருகிறது.
கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பில் தரமற்ற பொருட்கள் இருப்பதுடன், எடை குறைவாக இருப்பது உள்ளிட்ட பல்வேறு வகையான புகார்கள் வந்தடைந்தன. அதனால் இந்த முறை மளிகை பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பிற்கு பதிலாக அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரொக்கமாக பணம் வழங்க உள்ளதாக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1000 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என கூறப்படுகிறது.
இந்த ரொக்க பரிசு தொகையுடன் தற்போது, 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் 100 ml அல்லது 500 ml ஆவின் நெய் வழங்கப்பட முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. மேலும் கடந்த முறை பொங்கல் பரிசு தொகுப்பு மஞ்சள் பையில் வழங்கியது போல் இந்த முறையும் அவ்வாறே வழங்கப்படலாம். ஏனெனில் இதன் மூலமாக பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முடியும். இதையடுத்து தற்போது பொங்கலுக்கு 1 மாத காலமே இருப்பதால் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க
வீட்டில் இருந்தே ரூ. 1 லட்சம் சம்பாதிக்க வாய்ப்பு: மத்திய அரசின் சூப்பரான போட்டி!
ரேஷன் கடைகளில் வருமானத்தை உயர்த்த வேண்டும்: மத்திய அரசு வலியுறுத்தல்!