1. செய்திகள்

வீட்டில் இருந்தே ரூ. 1 லட்சம் சம்பாதிக்க வாய்ப்பு: மத்திய அரசின் சூப்பரான போட்டி!

R. Balakrishnan
R. Balakrishnan
Mega food event

வீட்டில் இருந்தபடியே மத்திய அரசுக்கு வேலை செய்துகொடுத்து மிக எளிதாக 1 லட்சம் ரூபாய் பணம் சம்பாதிக்க முடியும். இதற்கான அருமையான வாய்ப்பை உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சகம் வழங்குகிறது.

மெகா உணவுத் திருவிழா (Mega Food Festival)

மத்திய அரசின் உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகம் ஒரு பரிசுப் போட்டியை அறிவித்துள்ளது. வீட்டில் இருந்தபடியே நீங்கள் ஒரு லோகோவும் (Logo), டேக்லைனும் (Tagline) தயார் செய்துகொடுத்தால் போதும், உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் பரிசு கிடைப்பதற்கான வாய்ப்பு வரும். வருகின்ற 2023ஆம் ஆண்டு தினைகளுக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதை முன்னிட்டு 2023ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தினை உணவு பொருட்களை கவனத்தில் வைத்து மெகா உணவு திருவிழாவை (Mega Food Event 2023) நடத்தப்போகிறது மத்திய உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகம்.

இந்நிகழ்வுக்கு பெரியளவில் விளம்பரம் செய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, மெகா உணவுத் திருவிழாவுக்கு லோகோ மற்றும் டேக்லைன் தயார் செய்வதற்கு மத்திய அரசும், உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சகமும் போட்டி ஒன்றை நடத்தவிருக்கின்றன. இதில், உணவுத் திருவிழாவுக்காக நீங்கள் லோகோவும், டேக்லைனும் தயார் செய்து அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். உங்களின் லோகோவும், டேக்லைனும் அரசால் தேர்வு செய்யப்பட்டால் உங்களுக்கு ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் பரிசு கிடைக்கும்.

உங்களின் லோகோ தேர்வு செய்யப்பட்டால், லோகோவுக்காக 51,000 ரூபாய் பரிசு வழங்கப்படும். உங்கள் டேக்லைன் தேர்வு செய்யப்பட்டால் 50,000 ரூபாய் பரிசு வெல்ல முடியும். எனவே, இரண்டையும் வெற்றிபெற்றால் ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய் பரிசு வெல்ல முடியும். இந்த போட்டியில் பங்குபெற டிசம்பர் 20ஆம் தேதிக்குள் உங்களது லோகோ மற்றும் டேக்லைனை சமர்ப்பிக்க வேண்டும். உங்களது லோகோ மற்றும் டேக்லைனை https://www.mygov.in/ என்ற இணையதளத்தில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். உங்களது Profileல் பெயர், போட்டோ, முகவரி, மொபைல் எண் உள்ளிட்ட அனைத்து விவரங்களும் சரியாக பூர்த்தி செய்யப்பட்டிருக்க வேண்டும். முழு தகவல்களும் பூர்த்தி செய்யப்பட்ட கணக்குகள் மட்டுமே போட்டிக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

1 லட்சம் பரிசு

ஒரு நபரால் ஒரு லோகோ மற்றும் ஒரு டேக்லைன் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். ஒன்றுக்கும் மேல் சமர்ப்பித்தால் நிராகரிக்கப்படும். உங்களது டிசைனை JPEG வடிவில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். சிறந்த லோகோவை தேர்வு செய்ய உணவுப் பதப்படுத்துதல் அமைச்சகத்தால் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது.

டிசைன், ஸ்கேல் அடிப்படையில் ஒவ்வொரு லோகோவுக்கும் மார்க் வழங்கப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு இமெயிலில் தகவல் தெரிவிக்கப்படும். வெற்றிபெறுவோர் 1 லட்சம் ரூபாய் பரிசு வெல்ல முடியும்.

மேலும் படிக்க

பழைய பென்சன் திட்டம்: எச்சரிக்கை விடுக்கும் நிதி ஆயோக்!

அரைமணி நேர நீச்சல் பயிற்சி போதும்: பல ஆரோக்கிய பலன்கள் கிடைக்கும்!

English Summary: Opportunity to earn Rs. 1 lakh from home: Central government's super competition! Published on: 28 November 2022, 07:34 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.