பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு, ரேஷனில் அரிசிபெறும் கார்டுதாரர்களுக்கு பரிசு தொகுப்பு வழங்குகிறது. பச்சரிசி, சர்க்கரை, நெய், முத்திரி, கரும்பு உள்பட பொங்கல் பொருட்களுடன், ரொக்கமும் வழங்கப்படுவது வழக்கம். தற்போது, மாவட்டம் தோறும், ரேஷன் கார்டு தாரர் வங்கி கணக்கு இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
பொங்கல் பரிசு (Pongal Gift)
ரேஷன் கடை வாரியாக, வங்கி கணக்கு இல்லாதோர் பட்டியல் தயாரிக்கப்பட்டு, விற்பனையாளர்களை கொண்டு, இணைப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொங்கல் நெருங்கும் நிலையில், இந்தாண்டு பரிசு தொகை, வங்கி கணக்கில் செலுத்தப்படும் என, மக்கள் மத்தியில் தகவல்கள் பரவியுள்ளன.
திருப்பூர் மாவட்டத்தை பொறுத்தவரை, 79 ஆயிரம் கார்டு தாரர், கணக்கு இல்லாதோர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களிடம் மட்டும் வங்கி கணக்கு விவரம் பெறப்பட்டு இணைக்கப்பட்டு வருகிறது; கணக்கு இல்லாதோருக்கு, மத்திய கூட்டுறவு வங்கியில் புதிய கணக்கு துவங்கப்படுகிறது. இதையடுத்து, அனைத்து கார்டுதாரர்களும், வங்கி கணக்கு விவரங்களுடன், ரேஷன்கடைகளை அணுகத்துவங்கி விட்டனர்.
இது, விற்பனையாளர்களுக்கு பெரும் தலைவலியை ஏற்படுத்துகிறது. கிராமப்புறங்களில் வசிப்போர் பணம் எடுக்க சிரமப்படுவர் என்பதால், இந்தாண்டு மட்டும், பொங்கல் பரிசு தொகையை, வழங்கம்போல் ரொக்க பணமாக வழங்க அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் பரவுகின்றன.
ஆனால், அரசு தரப்பில் பொங்கல் பரிசு தொகுப்பு குறித்து இன்னும் எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. பொங்கல் பரிசு தொகுப்பில் என்னென்ன பொருட்கள் இடம்பெற உள்ளன என இன்னும் தெரியவில்லை. குறிப்பாக, பரிசு தொகை வங்கி கணக்கில் சேர்க்கப்படுமா அல்லது ரொக்கமாக கையில் வழங்கப்படுமா என மக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்க
பொங்கல் பரிசு ரூ.1000 ரேசன் கடையில் தான் கொடுக்கப் போறாங்க: ஆலோசிக்கும் அரசு!
UPI இல் தவறாக பணம் அனுப்பினால் இனி கவலையே இல்லை: இதைச் செய்தால் போதும்!