1. செய்திகள்

பொங்கல் பரிசு ரூ.1000 ரேசன் கடையில் தான் கொடுக்கப் போறாங்க: ஆலோசிக்கும் அரசு!

R. Balakrishnan
R. Balakrishnan
Ration - Pongal Gift

வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரூ.1000 ரொக்கப் பணத்துடன் பரிசுத் தொகுப்பாக பச்சரிசியுடன் சர்க்கரை, முந்திரி, ஏலக்காய், ஆவின் நெய் ஆகியவை வழங்கலாமா? என்றும் ஆலோசிக்கப்படுகிறது. பணமாக கொடுக்கும் பட்சத்தில் ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கார்டுதாரர்களின் வங்கிக் கணக்கு மூலம் வழங்கினால் எளிதாக இருக்கும் என்று நிதித்துறை கருத்து தெரிவித்து இருந்தது. ஆனால் ரூ.2 கோடியே 23 லட்சம் ரேஷன் கார்டுகளில் 14 லட்சத்து 86 ஆயிரத்து 582 கார்டுக்கு வங்கி கணக்கு இல்லாதது மட்டுமின்றி ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தது. இதை பூர்த்தி செய்தால் தான் வங்கிக்கணக்கு மூலம் பணம் போட முடியும் என்ற நிலை உருவாகி உள்ளது.

பொங்கல் பண்டிகை (Pongal)

கூட்டுறவு துறை வெளியிட்ட அறிவிப்பில் ரேசன் கார்டுதாரர்களுக்கு வங்கிக் கணக்கு இருந்தால் அதை ஆதார் எண்ணுடன் இணைக்க வேண்டும் என்று கூறி இருந்தது. ஆனாலும் இன்னும் அந்தப் பணி முழுமையாக முடிவடையவில்லை. இந்த பணிகள் ஒருபுறம் நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், ரூ.1000 ரொக்கப் பணத்தை ரேசன் கடை மூலம் பொதுமக்களுக்கு கையில் நேரில் கொடுப்பதுதான் சிறந்தது என்று அதிகாரிகள் தரப்பில் கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.

ரேசன் கடைகளின் மூலமாக ரொக்கப் பணத்தை கொடுப்பதின் மூலம் மக்கள் பிரதிநிதிகள் அதை அருகே இருந்து கவனித்துக் கொள்வார்கள் என்ற கருத்தும் முன் வைக்கப்பட்டுள்ளது. எனவே அதன் அடிப்படையில் பொங்கல் பரிசுப் பணம் இந்த முறை ரேசன் கடைகளில்தான் வழங்கப்படும் என தெரிகிறது. அது மட்டுமின்றி பொங்கல் பரிசு தொகுப்புடன் கரும்பு இடம் பெற வாய்ப்பில்லை என தெரிகிறது.

ஆனாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு அரசின் சார்பில் இன்னும் வெளியாகவில்லை. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதுபற்றி முடிவு செய்து விரைவில் இதற்கான அறிவிப்பை வெளியிடுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க

ரேஷன் கார்டில் புதிய வசதி: இனி டபுள் ஜாக்பாட் தான்!

பொங்கல் பரிசு: குடும்ப அட்டையுடன் வங்கி கணக்கை எப்படி இணைப்பது?

English Summary: Pongal gift of Rs.1000 is going to be given in the ration shop only: Government is consulting! Published on: 06 December 2022, 07:54 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.