ஒரு முட்டையின் விலை ரூ.65 என்கிற அளவில் இலங்கையின் பொருளாதார சூழ்நிலை சரிந்துள்ள நிலையில், உணவு பொருட்கள், தாதுக்கள், இராசயனங்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் நோக்கில் BIMSTEC உடன் இலங்கை அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
முட்டை நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இலங்கைக்கு, நாமக்கல்லில் உள்ள கோழிப்பண்ணைகள் மூலம் முட்டை கொள்முதல் செய்யப்படுவதால் தற்போது நாமக்கல் மாவட்ட கோழிப்பண்ணையாளர்களின் பொருளாதாரம் வளர்ச்சியடைந்துள்ளது.
BIMSTEC-(Bay of Bengal Initiative for Multi-sectoral Technical and Economic Corporation) முன்முயற்சியின் கீழ், இலங்கையின் அரசு வர்த்தக நிறுவனத்திற்கு இந்தியா ஆண்டுதோறும் 350 கோடி ரூபாய் மதிப்பிலான முட்டைகளை ஏற்றுமதி செய்யும் என்று தினேஷ்குமார் குரு சுவாமி (இந்தியாவின் BIMSTEC வர்த்தக கவுன்சில் மற்றும் ஏட்ராம் குழும நிறுவனங்களின் நிறுவனர்) தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், மியான்மர், தாய்லாந்து, பூட்டான் மற்றும் நேபாளம் ஆகியவை வங்காள விரிகுடாவை ஒட்டிய நாடுகளுக்கு இடையே நெருக்கமான உறவுகளை வளர்க்கும் விதக்கும் BIMSTEC அமைப்பில் உறுப்பினர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக, ஒரு முட்டை விலை இலங்கை நாணய மதிப்பிற்கு ரூ.65-வரை (இந்திய மதிப்பில் ஒரு முட்டை- ரூ.16) உயர்ந்தது. இந்தியாவில் இருந்து முட்டை இறக்குமதி செய்யப்படுவதால் தற்போது இந்த விலை சுமார் 13 ரூபாயாகக் குறைந்துள்ளது என்றார் குருசாமி.
ஒரு வருடத்திற்கும் மேலாக பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கை, அத்தியாவசிய உணவுப் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ள நிலையில் கால்நடைத் தீவனம் மற்றும் கோழித் பண்ணைகளுக்குத் தேவையான பிற பொருட்கள் கிடைக்காததால், முட்டை உற்பத்தி பாதிப்படைந்துள்ளது.
உள்நாட்டு நுகர்வோருக்கு நியாயமான விலையில் முட்டைகளை கொள்முதல் செய்ய உதவும் வகையில் இந்தியாவிலிருந்து மாதந்தோறும் 90 மில்லியன் கோழி முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான யோசனைக்கு இலங்கை அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து நாமக்கல்லில் இருந்து பொன்னி கோழிப்பண்ணையில் இருந்து 90 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் என்றார் குருசாமி.
ஆனால், தேவை அதிகமாக இருப்பதால், மற்ற பண்ணைகளிலிருந்தும் முட்டைகளை கொள்முதல் செய்ய உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார். இந்தியாவில் இருந்து சப்ளை செய்வதால் முட்டை விலை குறைவதோடு, விநியோக இடைவெளிக்கான காலமும் குறையும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் முட்டை, மிளகாய், வெங்காயம், பருப்பு வகைகள், தானியங்கள், தாதுக்கள் மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றின் வர்த்தகத்தில் BIMSTEC இலங்கையுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் சுமார் 1,000 கோடி ரூபாய் மதிப்புடையவை என்றும் குருசாமி கூறினார்.
மேலும் காண்க:
குடும்பத்தலைவிக்கான ரூ.1000- கடைசி நேரத்தில் முதல்வர் போட்ட கண்டிஷன்!
தங்கத்தின் விலை- கடந்த 2 நாட்களில் சவரனுக்கு கிடுகிடு உயர்வு