வெங்காயம் விலை, சமீப நாட்களாக உயர்ந்துள்ள நிலையில் அடித்தட்டு மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் வெங்காயம், உருளைக் கிழங்கு விலை உயர்வைத் தொடர்ந்து, சமையல் எண்ணெய் (Oil) விலைகளும் கடுமையாக உயர்ந்து வருகின்றன.
விலை மேலும் உயர வாய்ப்பு:
சூரியகாந்தி, கடுகு எண்ணெய், சோயா மற்றும் பாமாயில் என அனைத்து சமையல் எண்ணெய் வகைகளும், கடந்த 6 மாதங்களில் 33 முதல் 53 சதவிகிதம் வரை விலை அதிகரித்துள்ளன. கடுகு, சோயா எண்ணெய் (Soybean oil) மற்றும் பாமாயில் ஆகியவற்றின் விலை இந்தியாவில் தற்போது மிகவும் உச்சத்தை எட்டியுள்ளது. வெளிநாடுகளில் இருந்து அதிக விலைகொடுத்து எண்ணெய்யை இறக்குமதி (Import) செய்வதால், எதிர்வரும் நாட்களில் சமையல் எண்ணெய் விலைகள் மேலும் உயர வாய்ப்புள்ளது என்று எண்ணெய் வித்து சந்தை வல்லுநர்கள் (Oilseed market experts) தெரிவிக்கின்றனர்.
கடுகு எண்ணெய் விலை உயர்வு!
உள்நாட்டு ஃப்யூச்சர்ஸ் சந்தையில் கச்சா பாமாயில் (CPO) விலைகடந்த 6 மாதங்களில் மட்டும் 53 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்துள்ளது. சோயாபீன் மற்றும் கடுகு எண்ணெய் (mustard oil) விலைகளும் உயர்ந்து வருகின்றன. நாட்டின் விவசாய பொருட்களுக்கான மிகப்பெரிய ஃப்யூச்சர்ஸ் சந்தையான தேசிய பொருட்கள் மற்றும் டெரிவேடின்ஸ் பரிமாற்றத்தில் (NCDX), கடந்த வியாழக்கிழமையன்று கடுகு ஒப்பந்த விலைகுவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6 ஆயிரத்து 348 ஆக உயர்ந்தது. அதே நேரத்தில், NCDX-ல் சோயாபீனின் ஒப்பந்தம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 4 ஆயிரத்து 339 உயர்ந்தது.
விலை நிலவரம்:
சந்தை நிலவரப்படி, நாட்டில் கடுகின் மொத்த விலை வியாழக்கிழமையன்று 10 கிலோவுக்கு ரூ. 1,155 ஆகவும், சோயா எண்ணெய்யின் மொத்த விலை 10 கிலோவுக்கு ரூ. 995 முதல் 1010 ஆகவும், பாமாயில் (ஆர்.பி.டி.)ரூ. 10 கிலோவுக்கு ரூ. 935 முதல் 945 ஆகவும் உயர்ந்துள்ளன. சூரியகாந்தி எண்ணெய் 10 கிலோவுக்கானமொத்த விலை ஆயிரத்து 180 முதல்ஆயிரத்து 220 ரூபாயைத் தொட்டுள்ளது. மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்சில் (MCX) கச்சா பாமாயிலின் விலை,வியாழக்கிழமையன்று சுமார் 2 சதவிகிதம் உயர்ந்து 10 கிலோவுக்கு 869 ரூபாய் 70 காசுகளாக அதிகரித்துள்ளது.
Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்
மேலும் படிக்க
தரமற்ற எண்ணெய் அதிகளவில் விற்பனை! ஆய்வில் கண்டுபிடிப்பு!
தேவையற்ற சமையல் எண்ணெயை எரிபொருளாக்கலாம்!