பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 17 June, 2021 11:34 AM IST
Credit : Tamil News

சமையல் எண்ணெய்களின் விலை குறையத் தொடங்கி உள்ளதாக மத்திய நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வருடமாக நிறைய சமையல் எண்ணெய்களின் விலை வரலாறு காணாத அளவு கடுமையாக உயர்ந்துள்ளது.இந்நிலையில் நுகர்வோர் விவகாரங்கள் துறையின் தரவுகளின் படி, கடந்த ஒரு மாத காலமாக சமையல் எண்ணெய்களின் விலைகள் குறைந்து வருகின்றன. மும்பை மாநகரத்தின் விலைகளை பார்க்கும் போது, சிலவற்றின் விலைகள் சுமார் 20 சதவீதம் வரை குறைந்துள்ளது தெரியவருகிறது.

குறையும் எண்ணெய்களின் விலை

  • 2021 மே 7 அன்று ஒரு கிலோ ரூ 142 ஆக இருந்த பாமாயிலின் விலை தற்போது ரூ 115 ஆக 19 சதவீதம் குறைந்துள்ளது.

  • 2021 மே 5 அன்று ஒரு கிலோ ரூ 188 ஆக இருந்த சூரியகாந்தி எண்ணெயின் விலை தற்போது ரூ 157 ஆக 16 சதவீதம் குறைந்துள்ளது.

  • 2021 மே 20 அன்று ஒரு கிலோ ரூ 162 ஆக இருந்த சோயா எண்ணெயின் விலை தற்போது ரூ 138 ஆக 15 சதவீதம் குறைந்துள்ளது.

  • 2021 மே 16 அன்று ஒரு கிலோ ரூ 175 ஆக இருந்த கடுகு எண்ணெயின் விலை தற்போது ரூ 157 ஆக சுமார் 10 சதவீதம் குறைந்துள்ளது.

  • 2021 மே 14 அன்று ஒரு கிலோ ரூ 190 ஆக இருந்த கடலை எண்ணெயின் விலை தற்போது ரூ 174 ஆக 8 சதவீதம் குறைந்துள்ளது.

  • 2021 மே 2 அன்று ஒரு கிலோ ரூ 154 ஆக இருந்த வனஸ்பதியின் விலை தற்போது ரூ 141 ஆக 8 சதவீதம் குறைந்துள்ளது.

சர்வதேச விலைகள், உள்நாட்டு உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு சிக்கலான விஷயங்களை சமையல் எண்ணெய் விலைகள் சார்ந்துள்ளன. உள்நாட்டு நுகர்வு மற்றும் உற்பத்திக்கு இடையேயான இடைவெளி அதிகமாக இருந்த காரணத்தால், குறிப்பிட்ட அளவு சமையல் எண்ணெயை இந்தியா இறக்குமதி செய்யவேண்டி இருந்தது. இதற்கு நிரந்தர தீர்வு காணும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது.

இதன் மூலம் சமையல் எண்ணெய் உற்பத்தியில் இந்தியா தற்சார்பு அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க.....

புவிசார் குறியீடு பெற்ற ஜல்காவோன் வாழைப்பழம் துபாய்க்கு ஏற்றுமதி!!

தென்னையில் அதிக மகசூல் பெற, எப்போது எவ்வளவு உரம் இட வேண்டும்?

பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்ய வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்!

English Summary: Prices of Edible Oils begin to decline and bring relief to consumers
Published on: 17 June 2021, 11:31 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now