News

Sunday, 27 September 2020 07:49 AM , by: Elavarse Sivakumar

Credit : India.TV

தசரா, தீபாவளி (pooja and Diwali) போன்ற பண்டிகைக்காலங்கள் நெருங்கும் வேளையில், மக்கள் நம்பி வாங்கும் இனிப்புகளில், அவை காலாவதியாகும் தேதியைக் குறிப்பிட வேண்டியது அக்டோபர் 1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தரமில்லாத இனிப்புகளை விற்பனை செய்யப்படுவதற்கு தடை விதிக்கப்படுகிறது.

தயாரிப்பாளரின் கடமை (Producer`s Duty)

பொதுவாக எந்த ஒரு உணவுப் பொருளாக இருந்தாலும், அதனைத் தயாரித்த தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவற்றை வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்த வேண்டியது, தயாரிப்பாளரின் தார்மீகக் கடமை.

ஆனால் பொரும்பாலானோர், வாடிக்கையாளரின் நலனைக் கருத்தில்கொள்ளாமல், தங்கள் கல்லாப்பெட்டியை நிரப்புவதிலேயேக் கவனம் செலுத்துகின்றனர். இதனால், தரமில்லாத உணவு மற்றும் இனிப்பு வகைள் இன்றும் நாடு முழுவதும் விற்பனை செய்யப்படுகின்றன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் குறிவைத்து ஏமாற்றப்படுகின்றனர்.

Credit : Justdial

இதுதொடர்பாக வந்த பல்வேறு புகார்களின் அடிப்படையில், அக்டோபர் 1ம் தேதி முதல் புதிய விதியை அமல்படுத்த வேண்டும் என உணவு பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்பான FSSAI (Food Safety and Standards Authority of India) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

இதன்படி அக்டோபர் 1ம் தேதி முதல், காலாவதி தேதி குறிப்பிடப்படாத இனிப்புகளை விற்பனை செய்வதற்குத் தடை செய்யப்படுகிறது. மேலும், உணவுத்துறை ஆணையர்கள் அடிக்கடி அதிரடி சோதனை நடத்தி, விதி மீறும் நிறுவனங்கள் அல்லது இனிப்புக் கடைகள் மீது அபராதம் உள்ளிட்டவற்றுடன் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் பல நாட்களுக்கு முன்பு செய்த இனிப்புகளை விற்று மக்களை இனி ஏமாற்ற முடியாது.

மேலும் படிக்க..

பாக்கெட் சானிடைசர் கம் பேஸ்மாஸ்க் ஸ்ப்ரே- நாட்டிலேயே முதன்முறையாக உதகையில் தயாரிப்பு!

சிறுதானிய இனிப்புகளுடன் இந்த ஆண்டு தீபாவளி-இது எப்படி இருக்கு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)