1. செய்திகள்

PM Kisan FPO : விவசாய அமைப்புகளுக்கு ரூ.15 லட்சம் வரை கடன்!

Elavarse Sivakumar
Elavarse Sivakumar
PM Kisan FPO: Central government's plan to lend up to Rs 15 lakh to agricultural organizations!

விவசாயிகளின் பொருளாதாரத் தேவையைப் பூர்த்தி செய்து, அவர்களின் வருமானத்தை இரட்டிப்பாக்கத் திட்டமிட்டு செயல்பட்டு வருகிறது பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு.

கிஸான் எஃபிஓ யோஜ்னா திட்டம்

இந்த அரசு விவசாயிகளுக்காகக் கொண்டுவந்துள்ள நல்ல பலத் திட்டங்களில் ஒன்று, பிரதமரின் கிஸான் எஃபிஓ யோஜனா திட்டம் (PM Kisan FPO Yojana Scheme). இந்தத் திட்டத்தின்மூலம் கிராமப்புற விவசாயிகள் தொழில்தொடங்க ரூ.15 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தில் பயன் பெற வேண்டுமானால், நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான். ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்பதைக் கருத்தில் கொண்டு 11 விவசாயிகளைச் சேர்த்துக்கொண்டு உங்களுக்கென தனி அமைப்பை உருவாக்குங்கள்.

பொதுநல நோக்கத்தோடு செயல்படும் எண்ணமும் தழைத்தோங்கினால், நிச்சயம் வளம் பெற முடியும். அவ்வாறு உருவாக்கப்படும் இந்த அமைப்பு (Farmer Producers Organization FPO), உழவர் உழைப்பாளர் அமைப்பு என்று அழைக்கப்படுகிறது.

300 பேர் இலக்கு (300 Farmers)

இந்த FPOவில் இடம்பெற்றுள்ள விவசாயிகள், தனித்தனியாகக் குழுக்களை அமைத்து, அவற்றின் மூலம் மொத்தம் 300 விவசாயிகளை தங்கள் அமைப்பிற்குள் கொண்டு வரவேண்டும். அவ்வாறு கொண்டுவந்தால், விதைகளை மானியத்தில் வழங்குதல், உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்கள் இந்த அமைப்பின் மூலமே செயல்படுத்தப்படும். இதனை விவசாயிகள் தவறாமல் பயன்படுத்திக்கொள்ளலாம். 

Credit: Hindiguide

அதேநேரத்தில் மலைப்பகுதியைச் சேர்ந்த விவசாயிகளாக இருப்பின், இந்த அமைப்பில் 100 விவசாயிகள் இடம்பெறுவதேப் போதுமானது. ஆக இந்த விவசாயப் பிரதிநிதியின் மூலம் அரசு சார்பில் மானிய விலையில் வழங்கப்படும் உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லிகள் , வேளாண் உபரணங்கள் ஆகியவற்றை அனைத்து விவசாயிகளும் பெற்றுக்கொள்ள இயலும்.

வரும் 2024ம் ஆண்டிற்குள் ரூ. 6865 கோடி ரூபாய் பிரதமரின் FPO Scheme திட்டத்திற்கு ஒதுக்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த FPOக்களுக்கு 15 லட்சம் ரூபாய் வரை மத்திய அரசு கடன் வழங்கும். அதனை அந்த அமைப்பில் உள்ள விவசாயிகள் அனைவரும் பகிர்ந்து கொள்ளவேண்டும். அவ்வாறு பெறும் கடனை இந்த அமைப்புகள் 3 ஆண்டுகளுக்குள் திருப்பி செலுத்திவிட வேண்டும் என்பது கட்டாயம்.

எப்படி இணைவது? (How to join)

PM Kisan FPO திட்டத்தில் சேர விரும்பும் விவசாயிகள் உங்கள் பகுதிகளில் புதிதாகத் துவங்கப்பட்டுள்ள உழவர் உற்பத்தியாளர் அமைப்பைத் தொடர்பு கொண்டு, தங்களை இணைத்துக்கொள்ளலாம்.

அல்லது இணையதளம் வாயிலாகவும் இந்தத் திட்டத்தில், விவசாயிகள் இணையும் வாய்ப்பை மத்திய அரசு உருவாக்கி வருகிறது. இதற்கான முன்பதிவு ஆன்லைனில் இதுவரைத் தொடங்கவில்லை. இதற்கான அறிவிப்பை மத்திய அரசு விரைவில் வெளியிட உள்ளது. அறிவிப்பு வெளியானதும், விவசாயிகள் இந்தத் திட்டத்தில் இணைந்து பயனடையலாம்.

மேலும் படிக்க...

200 மெ.டன் உளுந்து கொள்முதல்- முன்பதிவு செய்ய விவசாயிகளுக்கு அழைப்பு !

விவசாயிகளுக்கு உர மானியமாக ரூ.5,000 வழங்கலாம் - CACP பரிந்துரை!!

English Summary: PM Kisan FPO: Central government's plan to lend up to Rs 15 lakh to agricultural organizations!

Like this article?

Hey! I am Elavarse Sivakumar. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.