பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 1 July, 2022 3:06 PM IST
Prohibition on Appointment of Temporary Teache

அரசுப்பள்ளிகளில் தற்பொழுது காலியாக இருக்கின்ற பணியிடங்களைத் தற்காலிக ஆசிரியர் மூலம் நிரப்புவது குறித்த விவகாரம் தமிழகத்தில் சமீபக் காலமாக சர்ச்சைகளை ஏற்படுத்தி வந்த நிலையில் இன்று அதற்கு ஒரு முற்றுப்புள்ளி கிடைத்துள்ளது. அது குறித்த தகவலை இப்பதிவில் பார்க்கலாம்.

அரசுப்பள்ளிகளில் தற்பொழுது காலியாக இருக்கின்ற பணியிடங்களைத் தற்காலிக ஆசிரியர்களைக் கொண்டு நிரப்புவதற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை எனவும் கேள்வி எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க: 7th Pay Commission: அரசு ஊழியர்களின் அகவிலைப்படி உயர்வு! பெரிய ஏற்றம்!!

 

தமிழகத்தில் அரசுப்பள்ளியில் காலியாக இருக்கின்ற 1,331 பணியிடங்களுக்கு அந்தெந்த பள்ளிக்கு அருகே தற்காலிக அடிப்படையில் ஆசிரியர்களை நியமனம் செய்யுமாறு பள்ளி மேலாண்மை குழுக்களுக்குப் பள்ளிக் கல்வித்துறை அண்மையில் அனுமதி அளித்தது. இதற்கு டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றும் நிரந்தர பணியிடங்களுக்கெனக் காத்திருக்கும் ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது நினைவுகூறத்தக்கது.

மேலும் படிக்க: புதுச்சேரி சிறைச்சாலையில் விவசாயம்! அசத்தும் கைதிகள்!!

இந்நிலையில் அரசின் இந்த முடிவை திரும்ப பெறக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு கோரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, தகுதியற்ற தற்காலிக ஆசிரியர் நியமனம் என்பது ஆபத்தானது என்று கருத்து தெரிவித்தார். மேலும் இதுக்குறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு, இன்று விசாரணைக்கு ஒத்திவைக்கப்பட்டது.

மேலும் படிக்க: மாதம் ரூ.1,000 வழங்கும் திட்டம்! இன்றே விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம் உள்ளே!

இதனிடையே இந்த வழக்கை இன்று விசாரித்த நீதிமன்றம், அரசுப்பள்ளிகளில் காலியாக இருக்கின்ற பணியிடங்களைத் தற்காலிக ஆசிரியர்கள் மூலம் நிரப்ப இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. அதோடு, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க தமிழக அரசுக்கு என்ன பிரச்சனை என்றும் கேள்வி எழுப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க: தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு! கட்டுப்பாடுகள் விதிப்பு!

முன்னதாகத் தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடத்ததாக புகார் எழுந்த வண்ணம் இருந்த நிலையில் , நியமனத்தை நிறுத்தி வைக்க பள்ளிக் கல்வித்துறை இன்று உத்தரவிட்டுள்ளது.

தற்காலிக ஆசிரியர்கள்‌ நியமனத்தில்‌ ஆசிரியர்‌ தகுதித்‌ தேர்வில்‌ தேர்ச்சி பெற்ற நபர்கள்‌ மற்றும்‌ இல்லம்‌ தேடிக்‌ கல்வி தன்னார்வலர்களுக்கு எந்த வகையில் முன்னுரிமை வழங்கப்பட வேண்டும்‌ என்ற விரிவான தெளிவுரைகள்‌ வழங்கப்படும்‌ வரை தற்காலிக ஆசிரியர்‌ பணியிடத்தை நிரப்பக்‌ கூடாது எனப் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

புதிய செய்திகள்: இனி சிலிண்டர் விலை இதுதானா? விலையில் சரிவு!

அதிரடியாகக் குறைந்த தங்கம் விலை! இன்றைய விலை நிலவரம்?

English Summary: Prohibition on Appointment of Temporary Teacher: Order of Action!
Published on: 01 July 2022, 03:06 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now