2022 சட்டமன்றத் தேர்தல்கள்:
உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா மற்றும் மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் தேசிய அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. பல கட்டங்களாக நடக்கவுள்ள இந்த சட்டமன்ற தேர்தல்களில் தங்களது நிலையை வலுப்படுத்திக்கொள்ளும் வகையில் அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் களம் இறங்கியுள்ளன.
மேலும் பாரதிய ஜனதா கட்சி செவ்வாயன்று பஞ்சாபில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. பஞ்சாப் மாநிலம் பொறுத்தவரை 5 ஏக்கருக்கும் குறைவான நிலம் வைத்திருக்கும் விவசாயிகளின் கடனை முழுமையாகத் தள்ளுபடி செய்யப்போவதாக அறிக்கையில் உறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அனைத்து வீடுகளிலும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்குபோவதாகவும், காய்கறிகள், பருப்பு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விளைவிக்கும் விவசாயிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலைக்கான (எம்.எஸ்.பி) உத்தரவாதம் அளிக்கப்போவதாக கட்சி உறுதி அளித்துள்ளது.
உத்தரபிரதேசத்தில், லவ் ஜிகாத் வழக்கில் குறைந்தபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாகவும் அக்கட்சியின் அறிக்கையில் கூறியுள்ளது. விவசாயிகளின் பாசனத்திற்கு இலவச மின்சாரம் வழங்குதல், கோதுமை மற்றும் நெல் கொள்முதல் செய்வதை பா.ஜ.க பலப்படுத்தும் என்று அறிக்கையில் கூறியுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் வெளியிட்ட அறிக்கையில், ராணி லக்ஷ்மி பாய் யோஜனா திட்டத்தின் கீழ், கல்லூரியில் படிக்கும் பெண்களுக்கு இலவச ஸ்கூட்டிகள் வழங்கபடும் என்றும் உறுதியளிக்கப்படுள்ளது. மேலும், 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பொது போக்குவரத்து வசதி வழங்கப்படும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், மேற்கு வங்க முதல்வரும், டிஎம்சி தலைவருமான மம்தா பானர்ஜி, சமாஜ்வாதி கட்சிக்கு வாக்கு சேகரித்தார். அவர் சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் உடன் இணைந்து செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டார். உத்திரப்பிரதேச மக்களை எஸ்பிக்கு வாக்களிக்குமாறு வலியுறுத்திய மம்தா பேனர்ஜி, ஹத்ராஸ் மற்றும் உன்னாவ் சம்பவத்திற்கு காரணமானவர்களை மன்னிக்காது என்றார்.
மேலும் படிக்க
எலக்ட்ரிக் டிராக்டர் ஏற்றுமதியால் ஊக்கம் பெரும் மேக் இன் இந்தியா!
PMMSY: மீன் வளர்ப்புக்கு ரூ. 3 லட்சம் வரை மானிய கடன் பெற வாய்ப்பு!