இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்யும் விவசாயிகள் அரசு மானியம் பெற விண்ணப்பிக்கலாம் என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் பி. உமா மகேஸ்வரி அழைப்புவிடுத்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், புதுக்கோட்டை மாவட்டத்தில் இயற்கை முறையில் (அங்கக வேளாண்மை)ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி மேற்கொள்ளப்படும் விளைபொருள்களுக்கு தமிழ்நாடு அரசின் தரச்சான்றிதழ் வழங்கப்படுகிறது.
விவசாயிகளுக்கு மானியம்
இதன்மூலம் அங்கக விளைபொருள்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம்.இயற்கை முறையில் சாகுபடி செய்யும் கீரை வகைகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.2,500-ம், வெண்டை, கத்தரி, தக்காளி போன்ற பயிா்களுக்கு ஹெக்டேருக்கு ரூ.3,750-ம் வழங்கப்பட்டு வருகிறது.
சான்று பெற ரூ.500 மானிம்
இயற்கை முறையில் காய்கறி பயிா்களை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு சான்று பெறுவதற்கு ரூ.500 மானியமாக வழங்கப்படுகிறது.மேலும் விவரங்களுக்கு புதுக்கோட்டை மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்ககச் சான்று உதவி இயக்குநா் மற்றும் வட்டாரத் தோட்டக் கலை உதவி இயக்குநா்களைத் தொடா்பு கொள்ளலாம்
மேலும் படிக்க...
வெயில் சுட்டெரிப்பதால் நாகையில் களைகட்டுகிறது தர்பூசணி விற்பனை!
டெல்லியில் 100 நாட்களை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்! முடிவுக்கு வருமா?