1. செய்திகள்

டெல்லியில் 100 நாட்களை நெருங்கும் விவசாயிகள் போராட்டம்! முடிவுக்கு வருமா?

KJ Staff
KJ Staff
Agriculture Laws

Credit : The Leaflet

வேளாண் சட்டங்களை (Agri bills) எதிர்த்து கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பலகட்டப் பேச்சுவார்த்தைகள், தோல்வியில் முடிந்தது. விவசாயிகளும், பல விதமான போராட்டங்களை அறிவித்து போராடி வருகின்றனர். டெல்லி எல்லையில் 97-வது நாளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரியானா, பஞ்சாப், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த விவசாயிகள் தலைநகர் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

11 முறை பேச்சுவார்த்தை தோல்வி:

3 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தங்களது போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். புதிய வேளாண் சட்டத்தில் (New Agriculture Laws) திருத்தங்கள் செய்வதற்கு மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால் இதனை ஏற்பதற்கு விவசாயிகள் தயாராக இல்லை. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் மத்திய அரசு இதுவரை 11 முறை பேச்சுவார்த்தை நடத்தி உள்ளது. ஆனால் இந்த பேச்சுவார்த்தையில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. வேளாண் சட்டங்களை திரும்ப பெறவேண்டும் என்பதில் விவசாயிகள் தொடர்ந்து உறுதியாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் டெல்லி (Delhi) எல்லையில் போராடி வரும் விவசாயிகளின் போராட்டம் இன்று 97-வது நாளை எட்டியுள்ளது. விவசாயிகளின் போராட்டம் 100 நாட்களை எட்டவுள்ள நிலையில், இன்னமும் இதற்கு தீர்வு கிடைக்கவில்லை.

12 ஆம் கட்டப் பேச்சுவார்த்தை:

விவசாயிகள் போராட்டத்தின் தாக்கம் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் (Election) எதிரொலித்த சூழலில் அடுத்ததாக தங்களுடைய போராட்டத்தை மேற்கு வங்க மாநிலத்தில் விரிவுப்படுத்த விவசாய சங்கங்கள் (Agricultural Associations) முடிவு செய்துள்ளனர். கடந்த 3 மாதங்களில் கடும் குளிரால் 200-க்கும் அதிகமான விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். இதனிடையே மார்ச் 8-ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் (Federal budget) கூட்டத்தொடரின் 2-வது அமர்வு தொடங்கும் நிலையில் அதற்கு முன்னதாக 12 ஆம் கட்டப் பேச்சுவார்த்தையை நடத்த மத்திய வேளாண் துறை (Central Department of Agriculture) அமைச்சர் முடிவு செய்துள்ளார்.

Krishi Jagran
ரா.வ. பாலகிருஷ்ணன்

மேலும் படிக்க

வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகள் வருமானம் 2024-க்குள் இரு மடங்காகும்! ஐ.நா.வில் இந்தியா விளக்கம்!

மானாவாரி வளர்ச்சி திட்டம் குறித்து விவசாயிகளுக்கு பயிற்சி!

English Summary: Farmers protest nearing 100 days in Delhi! Will it end?

Like this article?

Hey! I am KJ Staff. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments

Latest feeds

More News

CopyRight - 2021 Krishi Jagran Media Group. All Rights Reserved.