News

Saturday, 24 December 2022 11:05 AM , by: R. Balakrishnan

Punjab Rice

பொங்கல் பரிசு தொகுப்பில் பார்ப்பதற்கு, 'பளீச்' என இருக்கும் பஞ்சாப் பச்சரிசியை, வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. ரேஷன் கடைகளில் அரிசி பிரிவில் முன்னுரிமை கார்டுதாரர்களுக்கு, ஒவ்வொரு நபருக்கும் தலா 5 கிலோ அரிசி; 'அந்தியோதயா' கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி; முன்னுரிமையற்ற கார்டுதாரர்களுக்கு அதிகபட்சம், 20 கிலோ அரிசி மாதம்தோறும் இலவசமாக வழங்கப்படுகிறது. இந்த அரிசியை, மத்திய அரசின் இந்திய உணவு கழகம் ஒதுக்கீடு செய்கிறது.

ரேஷன் கடை (Ration Shop)

தமிழக நுகர்பொருள் வாணிப கழகம், விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லை, பச்சரிசி மற்றும் புழுங்கல் அரிசியாக மாற்றி, கார்டுதாரர்களுக்கு வழங்குகிறது. சென்னை, தர்மபுரி உட்பட மூன்று, நான்கு மாவட்டங்களில் மட்டுமே பச்சரிசி பயன்பாடு உள்ளது. மற்ற மாவட்டங்களில் புழுங்கல் அரிசிக்கு தான், தேவை அதிகம் உள்ளது. இதனால், மத்திய தொகுப்பில் இருந்து புழுங்கல் அரிசி அதிகம் பெறப்படுகிறது.

பொங்கல் பரிசு (Pongal Gift)

தமிழக அரசு, 2.19 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பாக, தலா 1,000 ரூபாய் ரொக்கத்துடன், 1 கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்க உள்ளது. அவற்றின் விநியோகம், ஜனவரி 2ல் துவங்குகிறது. பஞ்சாப் மாநிலத்தில் கிடைக்கும் பச்சரிசி, மற்ற அரிசியை விட, 'பளீச்' என்ற வெள்ளை நிறத்தில் நீளமாக இருக்கும். இது, சுவையாக இருப்பதுடன், பார்ப்பதற்கும் அழகாக இருக்கும். எனவே, பொங்கல் பரிசில் பஞ்சாப் பச்சரிசியை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. அந்த அரிசி, மத்திய தொகுப்பில் இருந்து, கிலோ 35.20 ரூபாய் விலைக்கு, 2.19 கோடி கிலோ வாங்கப்பட உள்ளது.

தமிழக விவசாயிகள் அதிர்ச்சி

தமிழக விவசாயிகள் அரசின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஏற்கனவே, தமிழக விவசாயிகளின் நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. இந்நிலையில், தமிழக விளைச்சலை புறந்தள்ளி விட்டு, மற்ற மாநிலங்களில் இருந்து அரிசியை வாங்குவது, தமிழக விவசாயிகளிடத்தில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க

ரேஷன் கடைகளில் வெல்லம் விற்பனை செய்யுங்கள்: தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை!

பொங்கல் பரிசு எவ்வளவு ரூபாய் தரப் போறாங்க? பொதுமக்கள் எதிர்ப்பார்ப்பு!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)