
தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் ‘கியூ ஆர் கோடு' மூலம் பணப்பரிவர்த்தனை செய்யும் நடைமுறையை கூட்டுறவு சங்கப்பதிவாளர் சண்முகசுந்தரம் அறிமுகம் செய்து வைத்தார்.
ரேஷன் கடைகளில் க்யூ ஆர் கோட் (QR Code at Tation Shops)
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படும் 53 தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், 7 நகர கூட்டுறவு கடன் சங்கங்கள், 10 மருந்தகங்கள், பணியாளர் கூட்டுறவு சங்கங்கள், காஞ்சீபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 602 கூட்டுறவு ரேஷன் கடைகள் உள்ளது.
இந்தநிலையில் தமிழகத்தில் முதல் முறையாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து கூட்டுறவு நிறுவனங்களிலும் மின்னணு பரிமாற்றம் (கியூ ஆர் கோடு) மூலம் பணமற்ற பரிவர்த்தனை நடைமுறைப்படுத்தும் திட்டத்தை காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட டெம்பிள் சிட்டியில் உள்ள எம்.வி.எம்.பி. நகர் ரேஷன் கடையில் சென்னை, கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
இன்றைய டிஜிட்டல் உலகில் பலருக்கும் ஆன்லைன் பணப் பரிவர்த்தனை திட்டம் உதவிகரமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இருப்பினும், இதுபற்றிய அறியாத சாமானிய மக்களுக்கு இந்தத் திட்டம் புரியாத புதிராகவே இருக்கும்.
மேலும் படிக்க
இனி வாட்ஸ்அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம்: மாநில அரசின் அருமையான முயற்சி!
ஜூலை 1 முதல் இவர்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடையாது: திடீர் அறிவிப்பு!