1. செய்திகள்

இனி வாட்ஸ்அப்பில் மின்கட்டணம் செலுத்தலாம்: மாநில அரசின் அருமையான முயற்சி!

R. Balakrishnan
R. Balakrishnan
Electricity bill on WhatsApp

மத்திய பிரதேச மாநிலத்தில் மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தும் வகையில் மின்கட்டணத்தை எளிய முறையில் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மின்கட்டணம் (EB Bill)

மத்திய அரசு நாடு முழுவதும் டிஜிட்டல் இந்தியா திட்டத்தை செயல்படுத்தி, தேவையற்ற பேப்பர் மற்றும் நேரடி பண பரிவர்த்தனைகளை தவிர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, மாநில அரசுகளும் இதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மத்தியபிரதேச மாநிலத்தில் வாடிக்கையாளர்கள் மின்கட்டணத்தை எளிமையாக வாட்ஸ்அப் மூலமாகவே செலுத்திக் கொள்ளும் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

WhatsApp மற்றும் எம்பிஎம்கேவிவிசிஎல் (மத்திய பிரதேசம் மத்திய க்ஷேத்ரா வித்யுத் விடரன் கோ லிமிடெட்) இணைந்து இந்த திட்டத்தை ஒப்பந்தம் செய்துள்ளனர். 07552551222 என்ற WhatsApp எண்ணுக்கு வாடிக்கையாளர்கள் முதலில் ஒரு செய்தியை அனுப்ப வேண்டும்.

அதில் இருந்து வெளியேறாமலேயே பயனர்களின் மின்பயன்பாட்டை உறுதி செய்து கட்டணத்தை செலுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் கிசான் கிரெடிட் கார்டு: மத்திய அரசு நடவடிக்கை!

EPFO அதிக ஓய்வூதியம் பெறுவதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!

English Summary: You can now pay electricity bills on WhatsApp: A great initiative by the state government! Published on: 05 May 2023, 09:27 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.