பந்து மற்றும் அரவை கொப்பரைக்கான கொள்முதல்: தரம் எப்படி இருக்க வேண்டும்? நெல்-வாழை மற்றும் பயறு வகை பயிர்களுக்கான காப்பீடு- விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பு நல்ல மகசூல் தரும் கோ 10 கம்பு வீரிய ஒட்டு இரகத்தின் சாகுபடி தொழில்நுட்பம்! குறுவை பருவத்தில் 26 பயிர்களுக்கான பயிர் காப்பீடு- அமைச்சர் முக்கிய அறிவிப்பு! நம்மாழ்வரின் மாணவர்- விதைகளின் காதலன்: நம்பிக்கையூட்டும் சாலை அருண் கேள்விக்குறியான குறுவை சாகுபடி- டெல்டா விவசாயிகளுக்கு மானியத் திட்டத்தை வழங்கிட உத்தரவு! இலவச இயற்கை வேளாண் உற்பத்தியாளர் பயிற்சி- எங்கே? எப்போது? விவசாயிகளுக்கு பசுந்தாளுர விதைகள்- புதிய திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்! Kisan Call Centre- ஒரே போன் காலில் விவசாய பிரச்சினைகளுக்கு தீர்வு!
Updated on: 21 May, 2023 10:45 AM IST
Quality tea production to improve farmers' livelihood: Minister informs!

தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி குன்னூர் சிமிஸ் பூங்காவில் நேற்று தொடங்கியது. கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

குன்னூரில் உள்ள சிமிஸ் பூங்காவில் தென்னிந்தியாவில் முதல் முறையாக குன்னூரில் 2 நாட்கள் நடைபெறும் தேயிலை கண்காட்சி தொடங்கப்பட்டது. இந்த கண்காட்சியினைச் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இந்த தொடக்க விழாவில் அமைச்சர் ராமச்சந்திரன் பேசியபோது, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பெறும் வகையில் அனைத்துத் துறைகளின் சார்பிலும் பல்வேறு சிறந்த திட்டங்களைத் தீட்டி தமிழகத்தை முதன்மை மாநிலமாக கொண்டு வரும் நோக்கில் செயல்படுத்தி வருகின்றார் என்று கூறியுள்ளார்.

கடந்த ஆண்டு நீலகிரிக்கு 22 லட்சம் சுற்றுலா பயணிகள் வருகை தந்திருக்கின்றனர். இந்த ஆண்டு அதனை விட அதிகமான சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்ப்பில் உள்ளது. தேயிலை விற்பனை செய்பவர்கள், வாங்குபவர்களுக்கு நல்ல தேயிலை மற்றும் கலப்பட தேயிலை தூள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தேயிலை கண்காட்சி நடத்தப்பட்டு இருக்கிறது.

நீலகிரியில் தரமான தேயிலை உற்பத்தியினைக் குறு, சிறு விவசாயிகள் மேற்கொள்ள தேயிலை வாரியம் மூலம் பயிற்சிகள் அளிக்கப்பட இருக்கின்றன. அந்த மாவட்டத்தில் உள்ள 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் 2 தொழிற்சாலைகளில் ஆா்தோடக்ஸ் வகை தேயிலையை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. தரமான தேயிலை உற்பத்தியை மேற்கொள்வதன் மூலம் மாவட்டத்தின் பொருளாதாரம் மேம்படுவதோடு, விவசாயிகளின் வாழ்வாதாரமும் செழிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து தேயிலை கண்காட்சியினை முன்னிட்டு குன்னூர் டைகர் ஹில் எனும் பகுதியில் நீலகிரி மாவட்ட நிர்வாகம். தமிழக சுற்றுலாத்துறை, இந்திய தேயிலை வாரியம் மற்றும் இன் கோசர்வ் சார்பில் பொது மக்களிடம் தேயிலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் மனித சங்கிலி தொடர் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனைத் தமிழக அமைச்சர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார். இதில் 1500 சிறு, குறு தேயிலை விவசாயிகள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க

New Gold rules: தங்க நகைகளை விற்க வேண்டுமா! இதை கவனிச்சிக்கோங்க!

மாநிலம் முழுவதும் 50 திணை விற்பனை நிலையங்கள்: அரசு முடிவு!

English Summary: Quality tea production to improve farmers' livelihood: Minister informs!
Published on: 21 May 2023, 10:28 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now