நிழல்வலை குடில் (shade net) முறையில் தரமான நாற்று உற்பத்திக்கு எவை முக்கியம்? விவசாய பணியினை எளிமைப்படுத்தும் STIHL பவர் டில்லரின் சிறப்பம்சங்கள் என்ன? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 18 June, 2022 11:36 AM IST
Ragi instead of Rice in the Ration Shop

பொது வினியோகத் திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகை (ராகி) அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாகச் செயல்படுத்தப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது.

தமிழகச் சட்டப் பேரவையில் 8.4.2022 அன்று உணவுத்துறை அமைச்சர், பொது வினியோக திட்டத்தின் கீழ் வழங்கப்படுகின்ற உரிம அளவில் ஒரு பகுதியாக, ஒரு குடும்பத்திற்கு 2 கிலோ கேழ்வரகை (ராகி) அரிசிக்குப் பதிலாக வழங்கும் திட்டம் ஒரு முன்னோடி திட்டமாக நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.

மேலும் படிக்க: DA Hike: அரசு பணியாளர்களுக்கு அகவிலைப்படி உயர்ந்தது!!

இந்த அறிவிப்பினை அடுத்து தமிழக அரசுக்கு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அந்த் கடிதத்தில் கூறியுள்ளதாவது,

  • 2018-ம் ஆண்டில் இருந்து தமிழகத்தில் கேழ்வரகு பயிரிடப்படும் பகுதியும், உற்பத்தியின் அளவும் உயர்ந்த வண்ணம் உள்ளன.
  • தர்மபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர் முதலிய மாவட்டங்களில் கேழ்வரகு அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது.
  • இந்த திட்டத்தின்படி நீலகிரி மற்றும் தர்மபுரி மாவட்ட ரேஷன் அட்டைதாரர்கள், அரிசிக்குப் பதிலாக அவர்களின் சொந்த விருப்பத்தின் பேரில் 2 கிலோ கேழ்வரகை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: பெண்களுக்கு இலவசத் தையல் இயந்திரம் தரும் மத்திய அரசு! இன்றே விண்ணப்பியுங்கள்!!

  • எனவே, நீலகிரி மாவட்டத்திற்கு 920 டன் கேழ்வரகும், தர்மபுரி மாவட்டத்திற்கு 440 டன் கேழ்வரகும் மொத்தம் 1,360 டன் கேழ்வரகு தேவைப்படுகிறது.
  • ரேஷன் கடைகளில் அரிசி வாங்கும் அட்டைதாரர்களுக்கு அவர்களின் விருப்பத்தின் பேரில் தற்போது கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.
  • தற்போதைய நிலவரப்படி, கோதுமை, இந்திய உணவு கழகத்திடம் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. அ
  • தேபோல், கேழ்வரகையும் இந்திய உணவு கழகத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு கேழ்வரகு எவ்வளவு தேவைப்படுகிறதோ, அதைப் பொறுத்துக் கோதுமை ஒதுக்கீட்டைச் சரி செய்துகொள்ள இயலும்.
  • அதுபற்றி இந்திய உணவு கழகத்திடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கோழி வளர்ப்புக்குக் கடன் வழங்கும் வங்கிகள்! இன்றே பதிவு செய்யுங்கள்!!

மேலும், கோதுமைக்குப் பதிலாகக் கேழ்வரகினைக் கொள்முதல் செய்வதால் கூடுதல் செலவு எழ வாய்ப்பு ஏற்படாது என்று அறியப்படுகிறது. ஏனெனில், கோதுமை கிலோவுக்கு ரூ.2 எனவும், கேழ்வரகு கிலோவுக்கு ரூ.1 எனவும் இந்திய உணவு கழகத்தின் வழி வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு ஆணையர் கூறியுள்ளார்.

மேலும் படிக்க: TNPSC: டிஎன்பிஎஸ்சி தேர்வுக்கான புதிய விதிமுறைகள் இதோ!

நிர்வாக ஒப்புதல் பாதுகாப்பு ஆணையர் கருத்துகளை அரசு கவனமுடன் பரிசீலித்து, அதனை ஏற்றுக்கொண்டு, ஊட்டச்சத்து பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் நீலகிரி, தர்மபுரி மாவட்டங்களில் அரிசிக்கு பதிலாக ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு குடும்பத்திற்கு அவர்களின் விருப்பத்தின்படி 2 கிலோ கேழ்வரகை வழங்கும் முன்னோடி திட்டத்திற்கு நிர்வாக ஒப்புதலை வழங்கித் தமிழக அரசு உத்தரவிடுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் படிக்க

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை! புதிய விலை நிலவரம்!

ஒரே நாளில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் - 20ம் தேதி வெளியாகிறது!

English Summary: Ragi instead of Rice in the Ration Shop: Govt. of Tamilnadu
Published on: 18 June 2022, 11:32 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now