தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலை கடைகளிலும் புகார் பதிவேடு வைக்கவேன்டும் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அனைத்து ரேஷன் கடைகளிலும் மக்கள் புகார் அளிக்க இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இணையவழியில் புகாரளிப்பதில் சிரமம் உள்ளதாக மக்கள் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மக்களின் புகார்களை எம்.எல்.ஏ-க்கள் ஆய்வுக் கூட்டத்தில் விமர்சித்தனர். இதைத் தொடர்ந்து மக்களின் பிரச்சனைகளை உணர்ந்த அரசு, அனைத்து ரேஷன் கடைகளிலும் புகார் பதிவேடுகள் வைக்கப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
இணையவழி புகார் பதிவில் பல நன்மைகள் இருந்தாலும், பதிவேடு முறையில் புகார்களை உடனடியாக பெற முடியும், அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கையும் எடுக்க முடியும் என்று தமிழக அரசு கூறியுள்ளது.
எனினும், நடைமுறையில் இருக்கும் இணைய வழி புகார் நடைமுறையும் அப்படியே அமலில் இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. மக்கள் தங்கள் வசதிக்கு ஏற்ப ரேஷன் கடைகள், நியாயவிலைக் கடை அதிகாரிகள் , முறைகேடுகள் ,பொருட்களின் விநியோகம், ஆகியவை தொடர்பான புகார்களை, புகார் பதிவேட்டிலோ,அல்லது இணைய வழி மூலமாகவோ தெரிவிக்கலாம்.
உடனடியாக அனைத்து நியாயவிலை கடைகளிலும் புகார் பதிவேடுகள் பொருத்தப்பட்டு மக்கள் புகார் அளிக்க வசதிகள் செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் அனைத்து ரேஷன் கடைகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொது மக்கள் திகைத்துப்போகும் அளவிற்கு ஒரு செய்தியும் வந்துள்ளது. இந்தியர்களுக்கு ஒரு பின்னடைவாக, ரேஷன் கடைகளிலிருந்து பொது விநியோக முறைமையின் (PDS) கீழ், இலவசமாகவோ அல்லது மானிய விலையில் பொருட்களைப் பெறும் மக்களுக்கான தகுதிகளை புதுப்பிக்க, உணவு மற்றும் பொது விநியோகத் துறை தீர்மானம் செய்துள்ளது.
தகுதியை முடிவு செய்யும் புதிய விதிகள் இந்த மாத இறுதியில் அறிவிக்கப்படும். பி.டி.எஸ் திட்டத்தின் பயனாளிகளுக்கான அளவுகோல் ஆகியவை இறுதி செய்வதற்காக மாநில அரசுகளின் அதிகாரிகளுடன் பல சுற்று சந்திப்புகளை நடத்தியுள்ளது.
உணவு மற்றும் பொது விநியோகத் துறை பகிர்ந்துள்ள தகவல்களின் படி தற்போது, 80 கோடி இந்தியர்கள் தேசிய உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பயன்பெற்று வருகிறாரகள்.
மேலும் படிக்க:
விண்ணப்பித்த 15 நாளில் புதிய ரேஷன் கார்டு - ஆளுநர் உரையில் தகவல்!!
சிலர் மட்டுமே ரேஷன் பொருட்கள் வாங்க முடியும்- புதிய அறிவிப்பு
ரேஷன் கடைகளில் உள்ள பொருட்களை ஆய்வு செய்ய தமிழக அரசின் அதிரடி உத்தரவு!!