தமிழ்நாட்டில் 14 லட்சத்து 86 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களின் வங்கி கணக்கு விவரங்கள் செல்லப்போவது இல்லை எனக் கூட்டுறவுத்துறை தெரிவித்து இருக்கிறது.
குடும்ப அட்டைதாரர்கள் பலருக்கு வங்கி கணக்குகள் இருந்தும், ஆதார் இணைக்கப்படாமல் இருப்பதால் வங்கி கணக்கு இல்லை என தரவுகள் வெளிப்படுத்துவதாக அதிகாரிகளுக்கு எழுதியுள்ள கடிதத்தில், கூட்டுறவுத்துறை சங்கங்களின் பதிவாளர் சண்முகசுந்தரம் கூறியுள்ளார்.
ஆகவே, கூட்டுறவு சங்கப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட நபர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று வங்கி விவரங்களைப் பெற்றுப் பதிவு செய்யவும், வங்கி கணக்கு இல்லாதவர்களுக்குக் கூட்டுறவு வங்கிகளில் ஜீரோ பேலன்ஸ் கணக்கு தொடங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
பொங்கல் பண்டிகையினையொட்டி ரேஷன் குடும்ப அட்டைத்தாரர்களுக்குப் பரிசு தொகுப்பு வழங்குவதற்குப் பதிலாக அவர்களின் வங்கி கணக்கில் பணத்தினைச் செலுத்த அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.
தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகுப்பு தமிழ்நாடு அரசின் சார்பாக வழங்கப்படுகின்றது.
2022ம் ஆண்டு சுமார் 2.15 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயனடைந்த இந்த திட்டத்தினை அனைத்து நியாயவிலைக் கடைகளின் வாயிலாக, உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயல்படுத்தியது. இந்த நிலையில் 2023ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு எந்த பரிசு பொருள் தராமல் அனைத்து குடும்ப அட்டைதார்களுக்கும் ரூ.1000 பணம் தர அரசு முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.
மேலும் படிக்க
IRCTC: ரயில் பயணிகளுக்கு வெளியான சூப்பர் தகவல்!
100 நாள் வேலை உறுதித் திட்டத்தை நிறுத்த முடிவா? அதிர்ச்சித் தகவல்!