மேட்டுப்பாத்தி- குழித்தட்டு முறை: நாற்றாங்கால் வளர்ப்புக்கு எது பெஸ்ட்? Rabbit farm: முயல் வளர்ப்பில் நியூசிலாந்து வெள்ளை இரகம்- பலன் தருமா? இயற்கை விவசாயத்தில் பூச்சி நோய் கட்டுப்பாடுக்கு என்ன செய்யலாம்? Tea plant: தேயிலை பற்றி உங்களுக்கு இந்த விஷயமெல்லாம் தெரியுமா? Raceway tank முறையில் ஸ்பைருலினா வளர்ப்பு- நன்மைகள் என்ன? 3 ஆண்டுகளில் விவசாயத்திற்கு திரும்பிய 56 மில்லினியன் இந்தியர்கள்- இது நல்ல அறிகுறியா? வெளிச்சத்தை பார்த்தால் பயப்படும்: ரேபிஸ் தொற்று நாயினை உடனே கொல்வது சரியா? ஒரே இயந்திரம்- பருத்தி அறுவடை முதல் பேக்கேஜிங் வரை: John Deere cotton picking machine விவசாயிகள் CIBIL மதிப்பெண்களை பராமரிக்க வேண்டிய அவசியம் என்ன?
Updated on: 24 May, 2022 6:31 PM IST
RBI Update: hike in repo rate, update will come on June 8!

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) ஏப்ரல் மாதம் நடந்த அதன் நிதிக் கொள்கைக் குழு ஆய்வுக் கூட்டத்தில் வட்டி விகிதங்களை உயர்த்துவது குறித்து எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று கூறியது. 2022 ஜூன் 6 முதல் 8 வரை நிதிக் கொள்கைக் குழு மீண்டும் கூடும் என்று ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. எனவே ஜூன் மாதம் வரை வட்டி விகிதம் உயராது என்று சந்தை குழுக்கள் மற்றும் வங்கி குழுக்கள் கணித்துள்ளன.

ஆனால், அதேநேரம் மே 4 அன்று ஆர்பிஐ எதிர்பாராத முடிவை எடுத்தது. ரெப்போ விகிதத்தை 40 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் செய்தியாளர்கள் சந்திப்பில் திடீரென அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. பொதுவாக வட்டி விகிதங்களை உயர்த்தவா? குறைக்கவா?நிலையானதா? நிதிக் கொள்கைக் குழுவின் ஆய்வுக் கூட்டத்தில் ரிசர்வ் வங்கியால் முடிவு எடுக்கப்படும்.

ஆனால் ரிசர்வ் வங்கி கவர்னர் பத்திரிக்கையாளர் சந்திப்பில் இவ்வளவு வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பார் என்று யாரும் எதிர்பார்க்கவில்லை. இந்த முடிவு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. ரிசர்வ் வங்கியின் ஆறுதல் மண்டலத்தை விட சில்லரை பணவீக்கம் அதிகமாக இருப்பதால், இந்த முடிவை எடுத்துள்ளதாக ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதன் மூலம் வட்டி விகித உயர்வு தொடர்பான இரண்டு ஆண்டு இடைவெளி முடிவுக்கு வந்ததையும் குறிப்பிட்டுள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று மற்றும் பொருளாதார நிலைமைகள் காரணமாக RBI வட்டி விகிதங்களை 250 அடிப்படை புள்ளிகள் அல்லது 2.50 சதவீதம் குறைத்துள்ளது. இப்போது பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்த முடிவு செய்துள்ளது. ரிசர்வ் வங்கி மே 4ம் தேதி வட்டி விகிதத்தை உயர்த்தியது.

RBI கவர்னர் சக்திகாந்த தாஸ் தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், பணவீக்க அழுத்தங்களைக் குறைக்க வட்டி விகிதங்களை தொடர்ந்து உயர்த்துவோம் என்று, அவர் தெரிவித்தார். ரெப்போ விகிதம் எவ்வளவு காலம் உயரும் என்று கூறாத அவர், 5.15 சதவீதம் உயர்வு என்பது உறுதியாகத் தெரியவில்லை என்றார். 

மேலும் படிக்க: கூட்டுறவு சங்கங்கள், அதிக பயிர் கடன்களை வழங்கும்

ஜூன் 8 அன்று நடந்த கூட்டத்தில், பணவியல் கொள்கைக் குழு, இரண்டு-மூன்று ஆண்டுகளில் அமைப்பில் பணப்புழக்கம் அதிகரித்துள்ளதால், ரிசர்வ் வங்கி அதைக் குறைக்க விரும்புவதால், சந்தை விகிதங்களை உயர்த்த நினைப்பது சரியானது என்று கூறியது. ரிசர்வ் வங்கி ஆளுநரின் கூற்றுப்படி, ஜூன் 8 ஆம் தேதி ரெப்போ வட்டி உயர்வு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஆனால், இது எந்த அளவுக்கு அதிகரிக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். 

ரெப்போ ரேட் என்பது வங்கிகளுக்கான கடனுக்கு ரிசர்வ் வங்கி விதிக்கும் வட்டி விகிதமாகும். ரெப்போ விகிதம் உயர்ந்தால் வங்கிகள் கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும் என்பது குறிப்பிடதக்கது. இது வாடிக்கையாளர்களுக்கு EMI சுமையை அதிகரிக்கும். வீட்டுக்கடன், தனிநபர் கடன் மற்றும் பிற கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும், மேலும் புதிய கடன் வாங்குபவர்களுக்கு அதிக வட்டி விகிதங்கள் பொருந்தும் என்பது குறிப்பிதக்கது. 

மேலும் படிக்க:

1 கிலோ மட்காத குப்பையைக் கொடுத்து ரூ.5 பெறலாம்! எப்படி?

நாட்டுக்கோழி பண்ணை அமைப்பு: கவனத்தில் கொள்ள வேண்டியவை

English Summary: RBI Update: hike in repo rate, update will come on June 8!
Published on: 24 May 2022, 05:55 IST

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

Donate now