News

Saturday, 08 August 2020 03:33 PM , by: Daisy Rose Mary

Credit :DTNext

நீலகிரியில் அடுத்த 24 மணிநேரத்திற்கு அதி கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்துள்ளது.இதனால் நீலகிரி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

கேரளா மற்றும் கர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் தமிழகத்தின் மேற்குத் தொடர்ச்சி மழையை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் நீலகிரி. கோவை, தேனி மாவட்டங்களில் தொடர் மழை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

நீலகிரியை வெள்ளக்காடாக மாற்றிய பேய் மழை 

நீலகிரி மாவட்டத்தின் அவலாஞ்சியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஒரே நாளில் 58 சென்டிமீட்டர் மழை (Nilgiris Records Highest Rainfall) கொட்டியது. இதனல் நீலகிரி மாவட்டத்தின் பல இடங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

நீலகிரியில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால், கூடலூரில் 100க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்தது. இதனால், அப்பகுதியில் வசித்துவந்த 250 பேர் மீட்கப்பட்டுப் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

தொடரும் அதி கனமழை 

இந்நிலையில், தென்மேற்கு பருவ காற்றின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்கு நீலகிரி மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் அதி கன மழையும் (Nilgiris expects very heavy Rainfall) என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் நீலகிரி மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் (Red alert) தொடர்கிறது.

Credit : DTnext

பிற மாவட்டங்களில் மழை எச்சரிக்கை (Forescast For Next 24 hours)

கோவை, தேனி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்குக் கன மழை முதல் மிகக் கனமழையும், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல், வேலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் இலேசான முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

மழை பொழிவு (Rainfall)

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 34 செ.மீ, பந்தலூரில் 19 செ.மீ., ஹாரிசனில் 18 செ.மீ. மழை பதிவாகி உள்ளது.

மீவனர்களுக்கு எச்சரிக்கை (Warning for Fisherman)

இன்று மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு அரபிக்கடல், வட மேற்கு மற்றும் அதனை ஒட்டிய வட கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வரை வீசக்கூடும் 

மஹாராஷ்டிரா குஜராத், கடலோர பகுதியை ஒட்டிய மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், கேரளா- கர்நாடகா கடலோர பகுதிகள், லட்சதீவு பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் 

தென்தமிழக கடலோர பகுதிகளில் குளச்சல் முதல் தனுஷ்கோடி வரை நாளை இரவு வரை கடல் அலை 3.5 முதல் 4.4 மீட்டர் வரை எழும்பக்கூடும். இதனால் மீனவர்கள் யாரும் இப்பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்லவேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க... 

வியாபாரச் சான்றிதழ் இல்லாத வணிகர்களும் PM SVANidhi திட்டத்தில் பயன்பெறலாம்!!

RBI : தங்க நகைகளுக்கு இனி அதிக கடன் (90% வரை) பெறலாம் - ரிசர்வ் வங்கி அறிவிப்பு

 

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)