News

Monday, 21 September 2020 01:58 PM , by: Elavarse Sivakumar

பீகாரைச் சேர்ந்த சாப்த் கிருஷி சயின்டிஃபிக் என்ற கம்பெனி, விவசாயிகள் விளைபொருட்களை குறிப்பாக, காய்கறிகளை குறைந்தபட்ச நாட்கள் கெடாமல் வைத்திருக்க உதவும் ஒரு குளிர்சாதனத் தூக்கு பெட்டியை கண்டுபிடித்துள்ளது.

சப்ஜி கோதி என்பதுதான் இதன் பெயர். குறைந்த செலவில் உருவாக்கப்பட்ட இந்த பெட்டி, காய்கறிகளை சேமித்து வைத்துக்கொள்வதற்கான ஒரு தீர்வு. தோட்டக்கலை விளை பொருட்களை  முதல், 40 நாட்கள் வரை சேமித்து வைக்க முடியும்.  இதனை இயக்குவதற்கு, தினமும் ஒரு லிட்டர் தண்ணீர் மற்றும் அன்கிரிட் அல்லது ஆப்கிரிட், 20 வாட் மின்சாரம் மட்டுமே தேவைப்படுகிறது.

200 கிலோ கொள்ளளவு வரை சேமிக்க ஏறத்தாழ 10 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும்.பழங்கள் மற்றும் காய்கறிகளை நீட்டிக்க குளிரூட்டலோ அல்லது ரசாயனமோத் தேவையில்லை. தோட்டக்கலை பொருட்கள் அழிந்துபோகும் பிரச்னையை சப்தி கோதி தீர்த்துவைக்கிறது. விவசாயிகள், கூட்டறவு மற்றும் வர்த்தகர்களுக்கு மலிவு தொழில்நுட்பத்தை நேரடியாக வழங்குவதன் வாயிலாக, கழிவுகளைக் குறைப்பதில், சப்ஜி கோதி பெரிய பங்காற்றுகிறது.

மேலும் விபரங்களுக்கு sethuraman.sathappan@gmail.com. saptikrishi@gmail.com என்ற இ-பெயில் முகவரியில் தொடர்பு கொளள்லாம். அலைபேசி 9820451259
மேலும் படிக்க...

அம்மை நோயில் இருந்து கோழிகளைப் பாதுகாப்பது எப்படி? இயற்கை முறை மருத்துவம்!

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இணையவழி அங்கக வேளாண்மைப் பயிற்சி !

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)