பழைய மகாபலிபுரம் சாலையில் புதிதாகக் கட்டப்பட்டு வரும் செம்மஞ்சேரி போலீஸ் கட்டிடத்தின் முன் மர்மமான முறையில் எழுந்தருளியிருந்த கட்டிடம் கோவில் போன்ற அமைப்பில் இருந்தது. இது குறித்துச் சமூக ஆர்வலர் ஒருவர் சமூக வலைதளங்களில் எச்சரிக்கை விடுத்ததையடுத்து, சென்னை மாநகராட்சியில் புகார் அளிக்கப்பட்டது.
2019-ம் ஆண்டு கட்டப்பட்ட, இந்த கட்டிடத்தை போலீசார் பயன்படுத்த, சென்னை உயர்நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்துள்ளது. தாமரைக்காணி ஏரியின் நீர்நிலையில் கட்டப்பட்ட நிலத்தில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுக் கட்டப்பட்ட ஸ்டேஷன் உள்ளது என கன்வீனர் ஜெயராம் வெங்கடேசன் தெரிவித்துள்ளார். மேலும், காவல் நிலையத்தை பாதுகாக்கும் வகையில், காவல் நிலையத்திற்கு முன்பாக கோயில் போன்ற அமைப்பு கட்டப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
அவர் GCC யில் ஆன்லைன் புகாரைப் பதிவுசெய்து சமூக ஊடகங்கள் வரை, பிரச்சனையைக் கொண்டு சென்றதால், கட்டிடம் இப்பொழுது இடிக்கப்பட்டது. இதற்கிடையில், சம்பந்தப்பட்ட நிலையத்தின் காவல்துறை அதிகாரிகளும், GCC இன் அதிகாரிகளும், அத்தகைய கட்டமைப்பைப் பற்றி தங்களுக்குத் தெரியாது என்று கூறி கையை விரித்துள்ளனர்.
வெறும் மரங்கள், செடிகளை நடுகிறோம் என போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, பொதுமக்கள் கட்டிடம் கட்ட முயற்சித்ததாகவும், கட்டிடம் அமைக்க முடியாது என்று கூறியதால் தாங்களே கட்டிடத்தை அகற்றி விட்டதாகவும் செம்மஞ்சேரி காவல் உதவி ஆணையர் ரியாசுதீன் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், இந்த நிருபர் GCC இன் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டபோது, அவர்களுக்கு கட்டமைப்பைப் பற்றி எதுவும் தெரியாது, ஆனால் அவர்கள் அதைப் பார்ப்பதாக உறுதியளித்ததை அடுத்து வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கட்டுமானத்தைச் சுற்றிப் போலீஸ் தடுப்புகள் இருப்பது குறித்து ஜெயராம் கேள்வி எழுப்பினார். “இது ஒரு தனியார் கட்டுமானமாக இருந்தால், அதைச் சுற்றி ஏன் செம்மஞ்சேரி காவல் நிலையத்தின் தடுப்புகளை வைத்திருக்கிறார்கள்? தனியார் கட்டுமானங்களுக்கு அரசு பாதுகாப்பு அளிக்கிறதா? என்று பல கேள்விகளை முன்வைத்து இருக்கிறார். “கடந்த சில நாட்களில், தடை உத்தரவை மீறி, கைவிடப்பட்ட வாகனங்கள், இந்த நிலையத்தின் பின்னால் வைத்திருப்பதை எங்களால் காண முடிந்தது. அதன் எதிரே கோவில் போன்ற அமைப்பு கட்டப்பட்டு வருவதையும் பார்த்தோம். இது நீர்நிலையில் அல்ல, சாலையில் கட்டப்பட்டுள்ளது என்று கூறப்பட்டாலும், அதுவும் விதிமீறலுக்கு சமம்” என்று ஜெயராம் கூறினார்.
நிலையத்தின் கட்டுமான வரலாற்றைப் பற்றி பேசிய ஜெயராம், நிலம் ஆக்கிரமிப்புச் செய்யப்படுவதாக உள்ளூர்வாசிகள் எச்சரித்த பிறகு, 2019 ஆம் ஆண்டில் நிலையத்தின் கட்டுமானம் குறித்து தனக்குத் தெரிந்ததாகக் கூறினார். பொதுப்பணித் துறை (PWD), செப்டம்பர் 2018 இல், நிலத்தை 12.5 மீட்டர் அளவிற்கு மண்ணால் நிரப்பவும், அதே உயரத்திற்கு அனைத்து சுற்று நடைபாதை மட்டத்தையும், உட்புற மழைநீர் வடிகால் வசதியையும் உருவாக்க உத்தரவிட்டது. அவரது பல புகார்கள் கவனிக்கப்படாமல் போனதால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தால் (சிஎம்டிஏ) சோழிங்கநல்லூரில் உள்ள தாமரைக்காணி ஏரி சட்டவிரோதமாக 'நீர்நிலை'யிலிருந்து 'நிறுவன பயன்பாட்டு மண்டலமாக' மறுவகைப்படுத்தப்பட்டதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.
முன்னதாக 2016 ஆம் ஆண்டில், காவல் நிலையம் கட்ட முயற்சித்த காவல்துறை வீட்டுவசதி வாரியத்தின் கட்டுமானப் பணியைப் பொதுப்பணித் துறையினர் முடக்கியதையும் அறிந்ததாக ஜெயராம் கூறினார். இதற்கிடையில், காவல் நிலையத்தை கட்டுவதற்கான நோக்கத்திற்காக மறுவகைப்படுத்தக் கோரி சிஎம்டிஏவிடம் நிலையம் மனு தாக்கல் செய்தது. இது 2019 இல் அங்கீகரிக்கப்பட்டது; அதோடு, பொதுப்பணித்துறை தடையில்லாச் சான்றிதழை வழங்கியது. "கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருக்கும்போது, தகவல் அறியும் உரிமை (ஆர்டிஐ) விண்ணப்பத்தின் மூலம் விவரங்களைச் சேகரித்தோம், மேலும் சில முரண்பாடுகளைக் கண்டறிந்தோம்" என்று ஜெயராம் கூறினார்.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் கிடைத்த தகவலின்படி, காவல் நிலையம் அமைந்துள்ள நிலத்தை, 'நீர்நிலையிலிருந்து 'நிறுவன பயன்பாட்டு மண்டலம்', சட்ட விரோதமாக, சி.எம்.டி.ஏ, விவரித்து, தாமரைக்காணி ஏரி, 'மெய்க்கால் தாங்கல் ரோடு' என வகைப்படுத்தப்பட்டது. மேலும், நீர்நிலையாக உள்ள நிலம் செம்மஞ்சேரி காவல் நிலையத்திற்கு புதிய சர்வே எண் ஒதுக்கி மாற்றப்பட்டு, சரியான திட்ட அனுமதியின்றி காவல் நிலைய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியிருப்பதையும் எடுத்துக் காட்டியுள்ளார்.
“மெய்க்கல் என்றால் மேய்ச்சல் நிலம், தங்கல் என்றால் நீர்நிலை. 61.49 ஹெக்டேர் (151.9 ஏக்கர்) பரப்பளவு கொண்ட ஒரு முழு ஏரியும் மேய்ச்சல் நிலம் மற்றும் நீர்நிலைகளுக்கு செல்லும் சாலையாக வருவாய்த் துறையால் வகைப்படுத்தப்பட்டுள்ளது மிகவும் குழப்பமாக உள்ளது,” என்று அவர் தனது பொதுநல மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த வழக்கு குறித்து ஜெயராம் கூறியதாவது,“எனது மனுவை விசாரித்த நீதிமன்றம், ஏப்ரல் 15, 2021 அன்று நிலத்தை ஆய்வு செய்ய சென்னையின், இந்திய தொழில்நுட்பக் கழகத்தின் (ஐஐடி-எம்) இயக்குநரை நியமித்தது. கட்டிடம் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதால், அதற்கான தீர்வு நடவடிக்கைகளையும் நீதிமன்றம் நாடியது, என்று அவர் கூறினார். மேலும், அந்த உத்தரவில், "இந்த நீதிமன்றத்தின் வெளிப்படையான முன் அனுமதியின்றி, அந்த இடத்தில் கட்டப்பட்டுள்ள கட்டுமானம், எந்த நோக்கத்திற்கும் பயன்படுத்தப்பட மாட்டாது" என்று கூறியதுடன், "மேலும் கட்டிடத்தை மேம்படுத்தவோ அல்லது முடிக்கவோ செலவிடக்கூடாது. கட்டிடம், முதலில் நீர்நிலையின் ஒரு பகுதியாக இருந்த நிலத்தில் கட்டிடம் கட்டப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டால் கட்டிடத்தை, கீழே இறக்குவதற்கு உத்தரவிடப்படலாம் என எதிர்ப்பார்க்கப்பட்டது.
மேலும் படிக்க