நாட்டில் முதல்முறையாக, 'ஸ்டீல்' கழிவுகளை பயன்படுத்தி குஜராத்தின் சூரத் நகரில் சோதனை ஓட்ட முறையில் சாலை போடப்பட்டது. நாடு முழுதும் உள்ள ஸ்டீல் தொழிற்சாலைகளில் இருந்து ஆண்டுதோறும் 2 கோடி டன் ஸ்டீல் கழிவுகள் நிலப்பரப்புகளில் கொட்டப்படுகின்றன. இந்த ஸ்டீல் கழிவுகளை சாலை அமைக்க பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது.
ஸ்டீல் ரோடு (Steel Road)
இந்த ஆராய்ச்சியில் சி.எஸ்.ஐ.ஆர்., எனப்படும் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சி கவுன்சில் மற்றும் மத்திய சாலை ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை ஈடுபட்டன. இவர்களுக்கு ஸ்டீல் அமைச்சகம் மற்றும் நிடி ஆயோக் உதவி செய்தன.
இந்நிலையில் குஜராத்தின் சூரத் நகரில் உள்ள ஹஸிரா துறைமுகத்திற்குள், 1 கி.மீ., துாரத்திற்கு, ஸ்டீல் கழிவுகளால் ஆன சாலை அமைக்கப்பட்டது. தினமும் 18 முதல் 30 டன் எடையுள்ள, 1,000த்திற்கும் மேற்பட்ட லாரிகள் தினமும் இந்த சாலையில் பயணித்தும் இது மிக உறுதியுடன் உள்ளது. சாலையின் தடிமன் 30 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதோடு, செலவும் 30 சதவீதம் வரை குறைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஸ்டீல் கழிவுகளில் போடப்படும் சாலையின் சோதனை முயற்சி வெற்றி அடைந்தால், அடுத்த கட்டமாக நாட்டில் இனி போடப்படும் சாலைகள் ஸ்டீல் கழிவுகளால் தான் அமையும்.
மேலும் படிக்க
இரயில் பயணிகளுக்கு நற்செய்தி: டிக்கெட் முன்பதிவில் புதிய வசதி!