1. மற்றவை

இரயில் பயணிகளுக்கு நற்செய்தி: டிக்கெட் முன்பதிவில் புதிய வசதி!

R. Balakrishnan
R. Balakrishnan
Good news for train passengers

நீங்களும் ரயிலில் பயணம் செய்பவராக இருந்தால் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி காத்திருக்கிறது. வழக்கமாக, ரயிலில் கன்பார்ம் டிக்கெட் (உறுதிசெய்யப்பட்ட டிக்கெட்) கிடைப்பதற்கு நீங்கள் ஒரு மாதம் அல்லது இரண்டு மாதங்களுக்கு முன்பே டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயற்சிப்பீர்கள். ஏனெனில், அவ்வளவு சீக்கிரம் கன்பார்ம் டிக்கெட் கிடைத்துவிடாது. ஆனால் இப்போது நீங்கள் அவ்வாறு செய்ய வேண்டியதில்லை. இரயிலில் ஏதேனும் பெர்த் காலியாக இருந்தால், அதைப் பற்றி இனி உடனடியாகத் தெரிந்துகொள்வீர்கள். உடனடியாக அந்த டிக்கெட்டை முன்பதிவு செய்யவும் முடியும்.

டிக்கெட் முன்பதிவு (Reservation Ticket)

IRCTC தளத்தின் மூலம் ஆன்லைனில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் போது, எல்லா ரயில்களிலும் இருக்கைகள் இருப்பதைக் காணலாம். இருக்கை காலியாக இருந்தால் முன்பதிவு செய்து, அது காலியாக இல்லை என்றால், அதிர்ஷ்டத்தின் அடிப்படையில் காத்திருப்பு டிக்கெட்டை எடுத்துக் கொள்வீர்கள். அதிக காத்திருப்பு இருந்தால், நீங்கள் முன்பதிவு செய்ய மாட்டீர்கள். உண்மையில், ரயிலில் எந்த இருக்கை காலியாக உள்ளது என்று தெரிந்துகொள்ளும் வசதி இதுவரை இல்லை. IRCTC இப்போது இந்த வசதியை பயணிகளுக்கு வழங்குகிறது.

புஷ் நோட்டிபிகேசன் (Push Notification)

IRCTC புதிதாக புஷ் நோட்டிபிகேசன் வசதியைத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், பயணிகள் இருக்கை வசதி உள்ளிட்ட பல வகையான வசதிகள் பற்றிய தகவல்களைப் பெற முடியும். IRCTC சமீபத்தில் தனது இணையதளத்தை புதுப்பித்துள்ளது. அதில் பல புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. ரயிலில் இருக்கை காலியாக இருந்தால், அதன் அறிவிப்பு பயனாளிகளின் மொபைல் போனுக்கு தகவலாகச் செல்லும். பயனர்கள் தங்கள் வசதிக்கேற்ப காலியாக உள்ள இருக்கையை முன்பதிவு செய்து கொள்ளலாம். இதற்காக, பயனர் முதலில் ஐஆர்சிடிசி இணையதளத்திற்குச் சென்று புஷ் நோட்டிபிகேசன் வசதியைப் பெற வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட தேதிக்கு நீங்கள் ஒரு ரயிலில் இருக்கையை முன்பதிவு செய்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதற்கு ரயிலில் எந்த இருக்கையும் கிடைக்கவில்லை என்றால் நீங்கள் டிக்கெட்டை முன்பதிவு செய்ய மாட்டீர்கள். அதன் பிறகு, அனைத்து ரயில்களிலும் டிக்கெட் கிடைக்குமா என்பதைச் சரிபார்ப்பீர்கள்.

நீங்கள் முன்பதிவு செய்யும் ரயிலில் ஏதேனும் ஒரு பயணி தனது டிக்கெட்டை ரத்து செய்தால் உங்களுக்கு மொபைலில் ஒரு அறிவிப்பு வரும். இந்த எஸ்எம்எஸ் செய்தியில் ரயில் எண் பற்றிய தகவல்கள் இருக்கும். அதன் பிறகு நீங்கள் விரும்பினால், இந்த டிக்கெட்டை முன்பதிவு செய்து உடனடியாக பயணம் செய்யலாம்.

நீங்கள் IRCTC இணையதளத்தை ஓப்பன் செய்யும்போது புஷ் நோட்டிபிகேசன் என்ற விருப்பத்தைப் பெறுவீர்கள். வாடிக்கையாளர்களுக்கு இச்சேவை முற்றிலும் இலவசம். இதற்காக, ஐஆர்சிடிசியின் அதிகாரப்பூர்வ இணையதளத்திற்குச் சென்று பதிவு செய்து, இந்தச் சேவையில் இணையவேண்டும்.

மேலும் படிக்க

படிப்படியாக உயரும் பெட்ரோல், டீசல் விலை: கவலையில் பொதுமக்கள்!

குறைந்த விலையில் விற்பனைக்கு வரும் ஹூண்டாய், கியா எலெக்ட்ரிக் கார்கள்!

English Summary: Good news for train passengers: New ticket booking facility! Published on: 26 March 2022, 09:44 IST

Like this article?

Hey! I am R. Balakrishnan. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.