News

Thursday, 14 July 2022 10:31 PM , by: R. Balakrishnan

1,000 Rupees Scholarship

தமிழக அரசு, அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவியர் உயர் கல்வியில் சேருவதை ஊக்கப்படுத்த, மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது. அந்த நிதியை, கூட்டுறவு வங்கிகள் வாயிலாக வழங்க, அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில், இதற்கு விண்ணப்பிக்க கால அவகாசம் தற்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

உதவித் தொகை (Scholarship)

கல்லூரி மாணவிகளுக்கு வழங்கப்பட உள்ள ரூபாய் 1,000 உதவித்தொகைக்கான பதிவை வரும் ஜூலை மாதம் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது: கல்லூரி மாணவிகளுக்கு ரூபாய் 1,000 உதவித்தொகை வழங்கும் திட்டத்தில், இது வரை 3.58 இலட்சம் மாணவிகள் விண்ணபித்து உள்ளனர்.

இதற்கான கடைசி தேதி கடந்த ஜூலை மாதம் 10 ஆம் தேதி வரை என கூறப்பட்டது. இந்நிலையில் இத்திட்டத்தில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி வரும் ஜூலை மாதம் 18 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்று மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய் அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இதனால், இதுவரையிலும் விண்ணப்பிக்காத மாணவிகள், விரைந்து விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் படிக்க

கூட்டுறவு வங்கி வழியாக மாணவியருக்கு ரூ.1,000 உதவித்தொகை!

வேலையில்லா பட்டதாரிகளுக்கு உதவித்தொகை: விரைந்து விண்ணப்பிக்கவும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)