குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகையை பெறுவதற்கு பலரும் விண்ணப்பித்து வருகிறார்கள். போதிய ஆவணங்கள் இல்லாமல் ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பதால், ஆன்லைனில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டு வருகின்றன. அதனால், ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் நிராகரிப்பதைத் தடுக்க தேவையான ஆவணங்கள் என்ன என்பதை தெரிந்துகொள்ளலாம்.
திமுக தேர்தல் அறிக்கையில் உறுதியளித்தபடி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு, குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டத்தை விரைவில் நடைமுறைப்படுத்தும் என்று மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நடந்து முடிந்த சட்டப்பேரவை கூட்டத்தில், குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 விரைவில் நடைமுறைப்படுத்தப்படும். அதற்காக, தகுதியான குடும்ப அட்டைதாரர்களை தேர்வு செய்வதற்கான வழிமுறைகள் தயார்செய்யப்படுகிறது என்று கூறினார்.
இதனால், தமிழகத்தில் விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என்று பலரும் திருமணமாணவர்கள் கூட்டுக் குடும்ப ரேஷட் அட்டையில் இருந்து தங்களது பெயர்களை நீக்கி புதிய ரேஷன் அட்டைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பித்து வருகின்றனர். ஆனால்,தேவையான ஆவணங்கள் இல்லாமல் விண்ணப்பிப்பதால் பல விண்ணப்பங்கள் ஆன்லைனிலேயே நிராகரிக்கப்படுகின்றன. அதனால், புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களின் ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படாமல் இருக்க அதற்கு என்னென்ன ஆவணங்கள் வேண்டும் எப்படி விண்ணப்பிக்க வேண்டும் என்பதை இங்கே பார்க்கலாம்.
தமிழகத்தில் புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மக்கள் உணவுப் பொருள் வழங்கல் துறையின் http://www.tnpds.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.
புதிய ரேஷன் கார்டுகளுக்காக விண்ணப்பிப்பவர்கள், ஆதார் அட்டை, முகவரி சான்று உள்ளிட்ட ஆவணங்களின் நகல்களையும் பதிவேற்றம் அவசியம் செய்ய வேண்டும். உணவு வழங்கல் துறை அதிகாரிகள் விண்ணப்பத்தை இணையதளம் மூலம் சரிபார்த்து வீடுகளுக்கு நேராக ஆய்வு செய்ய களப்பணியாளர்களை அனுப்புவார்கள்.
களப் பணியாளக்ரள் விண்ணப்பதாரர் வழங்கிய முகவரிக்கு சென்று ஆய்வு செய்து புதிய ரேஷன் கார்டு வழங்க பரிந்துரைப்பார்கள். ஆனால், தற்போது நிறைய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள் தேவையான ஆவணங்கள் இல்லாமல் ஆன்லைனிலேயே நிராகரிக்கப்படுகின்றன.
இதனால், புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகின்றனர். அதனால், ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்த பிறகு கூடுதல் ஆவணங்கள் தேவைப்படும் நிலையில் விண்ணப்பம் நிராகரிக்கப்படுவதை தடுத்து மீண்டும் பதிவேற்றம் செய்ய புதிய வசதி துருவங்கப்பட்டுள்ளது.
இது குறித்து உணவுப்பொருள் வழங்கல் துறை அதிகாரி ஒருவர் “ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிப்பவர்கள் தேவையான ஆவணங்களை தாக்கல் செய்யாத நிலையில் ரேஷன் கார்டு விண்ணப்பம் இதுவரை நிராகரிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது, இனி ரேஷன் கார்டு விண்ணப்பம் நிராகரிக்கப்படாது என்று கூறியுள்ளார்.
மேலும் படிக்க: