கொரோனா குறித்து வதந்திப் பரப்பினால் இந்திய மதிப்பில் 20 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் இல்லை. சவுதி அரேபியாவில்.
கொரோனா 2வது அலை (Corona 2nd wave)
உலகம் முழுவதையும் மீண்டும் தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது கொரோனா 2-வது அலை. கடந்த ஆண்டைவிட, இம்முறை தீவிரம் அதிகமாக இருப்பதால், கொத்துக்கொத்தாகப் பலரும் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
தொடரும் தொற்று பாதிப்பு (Vulnerability to persistent infection)
இந்தியாவைப் பொருத்தவரை, முன்னணி அரசியல்வாதிகள், திரைத்துறையினர், விளையாட்டு வீரர்கள் என எந்தப் பிரிவையும் விட்டுவைக்கவில்லை கொரோனாத் தொற்று. அதேநேரத்தில் தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்தாலும் கொரோனா பரவல் கட்டுக்குள் வரவில்லை.
பொதுமக்கள் தடுப்பூசிப் போட்டுக்கொள்ள ஊக்குவிப்பதற்கு உலக நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. மறுபுறம், தடுப்பூசியால் ஆபத்து என சில கும்பல்கள் வதந்தி பரப்பி வருகின்றன.
ரூ.20 கோடி அபராதம் (Rs.20 Crore Fine)
இந்நிலையில், கொரோனா குறித்து வதந்தி பரப்புவோருக்கு 10 லட்சம் ரியால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை விதிக்கப்படும் என சவுதி அரேபிய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
10 லட்சம் ரியால் என்பது இந்திய மதிப்பில் 20.10 கோடி ரூபாய் ஆகும். தொடர்ந்து பொய் பரப்புவோருக்கு இரட்டிப்பு அபராதம் (Double)விதிக்கப்படும் எனவும் சவுதி அரசு எச்சரித்துள்ளது.
73 லட்சம் டோஸ் (73 Lakh Dose)
சவுதி அரேபியாவில் கடந்த டிசம்பர் 17ஆம் தேதி முதல் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கியது. குடிமக்களுக்கு மட்டுமல்லாமல் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும், தொழிலாளர்களுக்கும் இலவசமாகத் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுவரை 73 லட்சம் டோஸ் (Dose)தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க...
கொரோனா 2வது அலை : ஒரே நாளில் 2 லட்சம் பேருக்கு நோய் தொற்று உறுதி!