தமிழக முதலமைசசர் மு.க ஸ்டாலின் அவர்களின் பொது நிவாரண நிதிக்கு ரூ.472 கோடி நன்கொடை கிடைத்திருப்பது அவர் மீதான நம்பிக்கையை காட்டுவதாக தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தனது ட்விட்டரில் தெறிவித்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், CMPRF இணையதளம் எளிதாக்கப்பட்டு,வரவு செலவு விவரங்கள் வெளிப்படையாக அறிந்துகொள்ள புதுப்பிக்கப்பட்டுள்ளது.மேலும் 14 மாத அதிமுக ஆட்சியில் ரூ.400 கோடி வசூலான நிலையில் 2 மாதங்களில் மட்டுமே ரூ.472 கோடி நன்கொடை கிடைத்தது முதல்வர் ஸ்டாலின் மீதான மக்களின் நம்பிக்கையை காட்டுகிறது என்று கூறினார்.
கொரோனா இரண்டாம் அலையில் தமிழக அரசுக்கு நிதி நெருக்கடி ஏற்பட்டது. அந்த நிலைமையை சமாளிக்க அதிகமாக நிதி தேவைப்பட்டதால், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி தருமாறு முதல்வர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து இருந்தார். இதுவரை ரூ.472 கோடி நன்கொடை திரண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
முதல்வர் நிவாரண நிதி பயன்படுத்தப்பட்ட முழு விவரங்கள் பொது வெளியில் வெளியிடப்படும் என்று முதல்வர் உறுதியளித்ததையடுத்து, அதற்கான இணையதளம் தொடங்கப்பட்டுள்ளது. அதனை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தொடக்கி வைத்தார்.
மேலும் படிக்க:
ரேஷன் கடை:ரேஷன் கடைகளில் புகார் பதிவேடு வைக்க தமிழக அரசு உத்தரவு!!
நாட்டில் விரைவில் பொது சிவில் சட்டமா? தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!
தமிழ்நாட்டில் புதிய தளர்வுகள்: ஊரடங்கு ஜூலை 19 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது