1. செய்திகள்

நாட்டில் விரைவில் பொது சிவில் சட்டமா? தில்லி உயர்நீதிமன்றம் உத்தரவு!!

T. Vigneshwaran
T. Vigneshwaran
Common Civil Law

நாட்டிற்கு மிகவும் தேவைப்படும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என தில்லி உயர் நீதிமன்றம் கேட்டுக்கொண்டது.

இந்தியாவில் சிவில் சட்டம் மற்றும் கிரிமினல் சட்டம் என்று இரண்டு வகையான சட்டங்கள் உள்ளன.  கிரிமினல் சட்டம் எல்லோருக்கும் பொதுவாக இருக்கையில், சிவில் சட்டம் பொதுவானதாக இல்லை.

பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தினால், இந்திய குடிமக்கள் அனைவர்க்கும் திருமணம், சொத்து, விவாகரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளில் ஒரேவிதமான சட்டம் ஒழுங்கு இருக்கும். இப்போது, பின்பற்றப்படும்  மதம் சார்ந்த சட்டங்கள் செல்லாது.

இந்தியாவின் அரசியலமைப்பு சட்டத்தின் (Indian Constitution) 44-வது பிரிவு, பொது சிவில் சட்டத்தை பரிந்துரைப்பதோடுமட்டுமல்லாமல் பாஜக தனது தேர்தல் வாக்குறுதியிலும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவோம் என்று வாக்குறுதியை வைத்தது.

இதுதொடர்பான வழக்கு மீண்டும் நேற்று தில்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதி பிரதிபா எம். சிங் முன்பு விசாரணைக்கு வந்தது.

விசாரணைக்கிடையில், நவீன இந்திய சமூகம் சிறிதாக மாறி மதம், சமூகம் மற்றும் சாதியின் பாரம்பரிய தடைகளை களைந்து, ஒரே விதமாக முன்னேறி வருகிறது. மாறிவரும் இந்த சூழ்நிலைகளை பார்க்கும்போது, நாட்டில், ஒரு பொதுவான சிவில் சட்டம் வேண்டும் என்று நீதிபதி குறிப்பிட்டார்.

நாட்டில் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் இருக்கவேண்டியது மிகவும் அவசியம் என்று நான் கருதுகிறேன். இதை அமல்படுத்த தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு கட்டாயம் எடுக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.

 பாஜக அரசு பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த முடிவெடுக்கும் நிலையில், பொது சிவில் சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. வரும் மழைக்கால கூட்டத் தொடரில் இது நிறைவேற்றப்படுமா என்பதை பார்க்க வேண்டும்.

மேலும் படிக்க:

தமிழகத்தில் தொடங்கபட்ட பேருந்து சேவையில் புதிய திருப்பங்கள்

தமிழகத்தில் ஏற்பட்ட தடுப்பூசி தட்டுப்பாடு:சென்னையில் தடுப்பூசி முகாம் இல்லை- சென்னை மாநகராட்சி அறிவிப்பு

புதிய அணை கட்டிப்புயலைக் கிளப்பிய கர்நாடக அரசு - வேதனையில் தமிழக விவசாயிகள்!

English Summary: Will there be a common civil law in the country soon? Delhi High Court orders !! Published on: 10 July 2021, 12:38 IST

Like this article?

Hey! I am T. Vigneshwaran. Did you liked this article and have suggestions to improve this article? Mail me your suggestions and feedback.

Share your comments


CopyRight - 2024 Krishi Jagran Media Group. All Rights Reserved.