News

Tuesday, 22 March 2022 06:12 PM , by: R. Balakrishnan

Rs 50 bribe per bundle to buy paddy

செங்கல்பட்டு மாவட்டத்தில் நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் லஞ்சம் பெற்று நெல் மூட்டைகள் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதேசமயம் நெல் அறுவடை செய்யப்பட்டு வருவதால், அதிகமான நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் செங்கல்பட்டு, திருக்கழுக்குன்றம், திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம் ஆகிய தாலுகாக்களில் கிணறு, ஏரி பாசனம் வாயிலாக, நெல் விவசாயம் செய்யப்படுகிறது. அறுவடைக்கு பின், நெல் மூட்டைகளை தனி நபர்களிடம், விவசாயிகள் விற்பனை செய்து வந்தனர்.

இலஞ்சம் (Bribery)

பல்வேறு சிரமங்களுக்கு இடையே, நெல் சாகுபடி செய்கிறோம். தனியாரிடம் விற்பனை செய்தால், குறைந்த விலையே கிடைக்கிறது. அரசு கொள்முதல் நிலையங்களில் 40 கிலோ சன்ன ரகம் 824 ரூபாய்க்கும், குண்டுநெல் ரகம் 40 கிலோ 806 ரூபாய்கும் விற்பனை செய்கிறோம். தனியாரிடம் விற்பதைவிட அரசு நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளுக்கு கூடுதல் வருமானம் கிடைக்கிறது.

இந்நிலையங்களில், நெல் விற்பனை செய்யும்போது, கூடுதலாக மூட்டை ஒன்றுக்கு 50 ரூபாய் வசூலிக்கப்படுகிறது. கிடைக்கும் பணம் இதிலேயே போய் விடுகிறது. மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைனில் பதிவு செய்து 20 நாட்களுக்கும் மேலாக காத்து கிடக்கிறோம். தவிர, பல இடங்களில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருவதால், கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கூறினர்.

நடவடிக்கை (Action)

விவசாயிகளிடம் நெல் மூட்டைகள் பெறும்போது, லஞ்சம் வாங்க கூடாது என தெரிவித்துள்ளோம். லஞ்சம் வாங்குவது பற்றி புகார் வந்தால், சம்பந்தப்பட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.நெல் கொள்முதல் நிலைய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க

இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் திட்டம்: மாற்றுப் பயிர் சாகுபடி!

குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயம் மட்டுமே விவசாயிகளுக்கு பாதுகாப்பு அளிக்கும்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)