கனமழை காரணமாகக் டேஷன் குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதனையொட்டி நாளை முதல் நியாய விலைகடைகளில் வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவிப்பு செய்துள்ளார். இது குறித்த விரிவான தகவலை இப்பதிவு விளக்குகிறது.
வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகக் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு டெல்டா மாவட்டங்களில் கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 1900ஆம் ஆண்டுக்கு பிறகு சீழ்காழியில் மிக, மிக கன மழையானது பெய்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
சீர்காழியில் 24 மணி நேரத்தில் மட்டும் 44 செ.மீ., பெரும்பகுதி -34.8 செ.மீ மழையும் பெய்தது. இதன் காரணமாக திரும்பிய எல்லா திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளித்ததோடு, சீர்காழி பகுதி குட்டி தீவு போல உருவாகியது. அதிலும் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்திருந்தது.
இதனையடுத்து மயிலாடுதுறை மாவட்டத்தில் சீர்காழி தரங்கம்பாடி வட்டங்களில் ஆய்வு செய்த பிறகு, மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக முதலமைச்சர் அந்த வட்டங்களில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபாய் 1000 வழங்க அறிவித்திருந்தார்.
இதனையடுத்து, நாளை முதல் நியாய விலைகடைகளில் சீர்காழி மற்றும் தரங்கம்பாடியில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ₹1000 வழங்கப்படும் என மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் இரா.லலிதா அறிவிப்பு தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க