அரசு கல்லூரிகளில் பயிலும், அரசு பள்ளி மாணவிகள் 2.5 லட்சம் பேரின், வங்கிக்கணக்கில் மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வரவு வைக்கப்பட உள்ளது. முதற்கட்டமாக இந்த பணப்பரிமாற்றம் மேற்கொள்ளப்பட இருப்பதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வித் திட்டம்
உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது. மேலும் அரசு கல்லூரிகளில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதும் இந்தத் திட்டத்தின் இலக்கு.
தகுதி
அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து உயர்கல்வியில் சேரும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் மூவலூர் ராமாமிர்தம் உயர்கல்வி உறுதி திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது.
உயர்கல்வியில் மாணவிகள் அதிக எண்ணிக்கையில் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்டது.
அவகாசம்
இந்த திட்டத்தின் கீழ் பயன்பெறும் மாணவிகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய அவகாசம் வழங்கப்பட்டது. அதன்படி மாணவிகள் தங்களுடைய விவரங்களை பதிவு செய்தனர். அண்மையில் இதற்கான நிதியையும் ஒதுக்கி தமிழக அரசு, அரசாணையாக வெளியிட்டது.
ரூ.1,000
இந்தநிலையில் முதல்கட்டமாக 2½ லட்சம் கல்லூரி மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித்தொகை வழங்கும் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படிப்படியாக இதன் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
மேலும் படிக்க...
தேசத்தின் சிறந்த முதல்வர்கள் பட்டியல் - 3ம் இடத்தில் மு.க.ஸ்டாலின்!