News

Thursday, 11 February 2021 09:59 AM , by: Elavarse Sivakumar

Credit: Twitter

Paytm மூலமாக வீட்டு வாடகை செலுத்தினால் 1,000 ரூபாய் கேஷ் பேக் தரும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.

Paytm

இன்றைய காலத்தில், சென்னை போன்ற பெருநகரங்களில், அனைவருக்கும் சொந்தவீடு என்பது சாத்தியமில்லை. அதனால் இவ்வகை நகரங்களில், அதிகளவில் லைன் (Line)வீடுகளை வாடகைக்கு விடுவது தொழிலாகவே நடத்தப்பட்டு வருகிறது. ஏனெனில், இங்கு பணிநிமித்தமாக வருபவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

எனவே நாம் வாங்கும் சம்பளத்தில் ஒவ்வொரு மாதமும் மிகப் பெரிய தொகையை வீட்டு வாடகைக்காகவே செலவழிக்க வேண்டியுள்ளது. இதுபோன்ற சூழலில் வீட்டு வாடகை செலுத்தும்போது உங்களுக்கு 1,000 ரூபாய் கேஷ் பேக் கிடைத்தால் அது எவ்வளவு உதவியாக இருக்கும்? அப்படிப்பட்ட ஒரு சலுகைத் திட்டத்தை Paytm நிறுவனம் அறிவித்துள்ளது.

பல்வேறு சலுகைகள் (Various offers)

Paytm செயலியில் பணம் அனுப்புவது, ரீசார்ஜ் செய்வது, சிலிண்டர் புக்கிங், மின்சாரக் கட்டணம் செலுத்துவது போன்ற பல்வேறு சேவைகள் இருக்கின்றன. இதில் புதிதாக சேர்க்கப்பட்டதுதான் வீட்டு வாடகைக்கு கேஷ் பேக்( Cash Back). எனவே இனி பேடிஎம் மூலமாகவே வீட்டு வாடகையைக் கட்டலாம்.

உங்களது வீட்டு வாடகையை நீங்கள் பேடிஎம் ஆப் மூலமாக கிரெடிட் கார்டைப் (Credit Card) பயன்படுத்தி செலுத்தலாம். இச்சேவையைப் பிரபலப்படுத்தும் நோக்கத்தில்தான் கேஷ் பேக் சலுகையை பேடிஎம் அறிவித்துள்ளது. Paytm மூலமாக வீட்டு வாடகை செலுத்தி கேஷ் பேக் பெறுவதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

வழிமுறைகள் (Instructions)

  • பின்னர் வீட்டு வாடகைத் தொகையைப் பதிவிட்டு Proceed to pay என்பதை கிளிக் செய்யவும்.

  • உங்களது கிரெடிட் கார்டு விவரத்தைத் தேர்வுசெய்து கட்டணம் செலுத்தவும்.

  • சில நிமிடங்களில் வீட்டு வாடகை உரிமையாளரின் வங்கிக் கணக்கில் டெபாசிட் செய்யப்பட்டுவிடும்.

மேலும் படிக்க...

வட்டியே இல்லாமல் கடன் வேணுமா? இந்த ஆப்பில் வாங்கலாம்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)