News

Thursday, 25 August 2022 10:40 PM , by: Elavarse Sivakumar

கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த தங்கத்தின் விலையில், தற்போது வீழ்ச்சி காணப்படுகிறது. குறிப்பாக,  கடந்த 10 நாள்களில் தங்கம் விலை சவரனுக்கு கிட்டத்தட்ட ரூ.1,000 வரை சரிவை கண்டுள்ளது. இதனால், இல்லத்தரசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தனி கவுரவம்

பெண்களைப் பொருத்தவரை, தங்கத்தின் மீது எப்போதுமே ஈர்ப்பு இருக்கும். ஏனெனில் தங்கம்தான், சமூகத்தைப் பொருத்தவரை, தங்க ஆபரணங்களை அணிவதுதான், கவுரவமாகப் பார்க்கப்படுகிறது. அது மட்டுமல்ல, பங்கு சந்தை முதலீட்டாளர்களின் கவனமும், ரஷ்யா- உக்ரைன் போர் காரணமாக, தங்கத்தின் பக்கம் திரும்பியுள்ளது.

இதன் எதிரொலியாக, கடந்த 10 நாட்களில், ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ஆயிரம் ரூபாய் வரை குறைந்திருக்கிறது.சென்னையில் இன்று ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கம் கிராம் ரூ.4,805 விற்பனையாவதுடன், சவரன் ரூ.38,840400 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

சரியாக 10 தினங்களுக்கு முன்பு ஆபரணத் தங்கம் கிராம் 4,914 ரூபாயாக இருந்தது. எனவே இனிவரும் மாதங்கள் திருமண சீசன் என்பதால், திருமணம் வைத்திருப்பவர்கள், தங்கம் வாங்க இது சிறந்த தருணமாகவே உள்ளது.

மேலும் படிக்க...

குடும்பத் தலைவிகளுக்கு இலவச ஸ்மார்ட்போன் - அரசு அறிவிப்பு!

தன் உயிரைக் கொடுத்துத் தாயைக் காப்பாற்றிய மகன்!

எங்களுக்கு ஆதரவளியுங்கள்!

அன்பான நேயர்களே, கிருஷி ஜாக்ரன் வாசகராகத் தொடர்ந்து இருப்பதற்கு நன்றி. உங்களைப் போன்ற வாசகர்களால் தான் வேளாண் பத்திரிக்கைத் துறை முன்னேறி வருகிறது. கிருஷி ஜாக்ரன் பத்திரிக்கையை உயர்ந்த தரத்தில் தொடர்ந்து வழங்குவதற்கும் கிராமப்புற இந்தியாவின் ஒவ்வொரு மூலையிலும் உள்ள விவசாயிகளையும் மக்களையும் சென்றடைய உங்களின் மேலான ஆதரவு கோருகிறோம்.

உங்களின் சிறு பங்களிப்பு கூட வேளாண் துறையை மாற்றியமைக்கும்....

பங்களிப்பு செய்யுங்கள் (Contribute Now)